தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குடும்பம்தான் எனக்கு மிகவும் முக்கியம் : குஷ்பு

Go down

குடும்பம்தான் எனக்கு மிகவும் முக்கியம் : குஷ்பு Empty குடும்பம்தான் எனக்கு மிகவும் முக்கியம் : குஷ்பு

Post  ishwarya Tue Mar 26, 2013 1:09 pm



மும்பையில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் கோயில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்ற குஷ்புவிற்கு தற்போது பல முகங்கள். 2 குழந்தைகளுக்கு தாய், தயாரிப்பாளர், 2 நிறுவனங்களுக்கு முதலாளி, டிவி ஷோக்களை வழங்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர், அரசியல்வாதி என அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதை எல்லாவற்றையும் இவர் எப்படி சமாளிக்கிறார் என்று மலைத்து நின்றோம். ஏன் நிற்க வேண்டும். அவரிடமே கேட்டு விடலாம் என்று நடையைக் கட்டினோம். மூச்சு வாங்க சென்ற நமக்கு ஒரு டி கொடுத்து உபசரித்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

எவ்வளவோ பிரச்சினைகள் வந்தாலும் உங்களால் எப்படி சமாளிக்க முடிகிறது?

பிரச்சினைகள் வரும் போதுதான் நமக்குள்ள திறமைகளை வெளி வருகின்றன. தன்னம்பிக்கை இருந்தால் எந்த பிரச்சினையையும் எளிதாக சமாளித்து விடலாம்.

பல்வேறு முகம்கள் உங்களுக்கு. எப்படி எல்லாவற்றையும் ஒருவரால் கவனித்துக் கொள்ள முடிகிறது?

குடும்பத்தையும் வேலையையும் சமநிலைப் படுத்தத் தெரிந்து கொண்டால் போதும். எனக்கு எப்போதுமே என் குடும்பம்தான் முக்கியம். மற்ற வேலைகளை குடும்பத்திற்காக தியாகம் செய்வேன். ஆனால் எதற்காகவும் குடும்ப விஷயத்தை தியாகம் செய்ய மாட்டேன்.

சினிமாவில் நடிப்பை தொடருவீர்களா?

தற்போது மலையாளம் படம் மிஸ்டர் மருமகன் படத்தில் அராஜக மாமியாராக நடிக்கிறேன். ஆனால் வில்லியாக இல்லை என்கிறார்.

அரசியலில் நுழைந்தது பற்றி கேட்டால்?

நாம் வாழ்வது ஜனநாயக நாடு. இதில் மக்களுக்கு பெரிய அளவில் ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் நிச்சயமாக அது அரசியலால் தான் முடியும். நல்ல முறையில் அரசியலில் ஈடுபட்டால் மக்களுக்கு நிச்சயம் சேவை செய்ய முடியும் என்கிறார் நமது முன்னாள் கனவுக் கன்னி குஷ்பு.

அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினோம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum