சொத்து முழுவதையும் இழந்தாலும் தேச ஒற்றுமைதான் எனக்கு முக்கியம்: கமல் பேட்டி
Page 1 of 1

விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்கி நேற்று இரவு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, கமலஹாசன் பத்திரிகையாளர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
‘விஸ்வரூபம்’ படம் தடை, தடைக்கு தடை என்று போய்க்கொண்டே இருக்கிறது. இது ஏன் என்பது நிஜமாகவே எனக்கு விளங்கவில்லை. எனது, படம் நடக்கும் தளம் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா. கதை இப்படியிருக்கும்போது, இது இந்திய முஸ்லீம்களை கேலி செய்யும் படமாக எப்படி இருக்கும். இன்று, தியேட்டருக்கு போன என்னுடைய ரசிகர்கள் போலீசாரால் வெளியே அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
பெரும் செலவு செய்து இந்த படத்தை நான் எடுத்திருக்கிறேன். இதில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில், வியாபார முதலீட்டில் எனக்கிருக்கும் அனுபவத்தில் இந்த படத்தை நான் எடுத்தேன். எனக்கு பெரிய அளவில் சொத்துக்கள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். என்னிடம் இருக்கும் சொத்து முழுவதையும் இந்த படத்தில் முதலீடு செய்திருக்கிறேன். இன்று நான் உங்களை சந்திக்கும் வீடு நாளை எனக்கு இருக்குமா என்று தெரியவில்லை. காரணம் இந்த வீட்டையும் நான் கடன் வாங்கியவருக்கு எழுதிக் கொடுத்துதான் படம் எடுத்திருக்கிறேன்.
எனக்கு பணம் பெரிதல்ல. எனது சொத்துக்கள் முழுவதையும் இழந்தாலும் கவலைப்பட மாட்டேன். என் ரசிகர்கள் என்னைக் காப்பாற்றுவார்கள்.
நான் தனி மனிதன். தனிமனிதன் நலனைவிட நாட்டின் ஒற்றுமையே முக்கியமென்று நீதிபதி தெரிவித்திருக்கிறார். நாடு ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியம்.
நான் விழுந்தாலும் தனி மனிதாக விழமாட்டேன். விதையாக விழுந்து மரமாக வளர்வேன். பல சுதந்திர பறவைகள் அமரும் மரமாக இருப்பேன். எனக்கு அரசியல், மதம் கிடையாது. எல்லோரையும் சமமாக பார்க்கிறேன். யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. மதங்களைவிட மனிதம்தான் எனக்கு முக்கியம்.
என்னை உலகநாயகன் என்று சொல்வதால், என்னை தமிழகத்தைவிட்டு வெளியேற்றிவிட நினைக்கிறார்கள் என்று கருதுகிறேன். தமிழகம் எனக்கு இல்லாமல் போனால் மதசார்பற்ற இல்லாத மாநிலத்தையோ, நாட்டையோ தேடிச் செல்வேன். என்னை எங்கு குடியமர்த்துவது என்பது ரசிகர்களுக்கு தெரியும். நான் யாருக்கும் கடன் வைக்க மாட்டேன். ஏனென்றால் எனக்கு இதுவரை வருமானவரி பாக்கிகூட கிடையாது.
இது மதசார்பற்ற ஜனநாயக நாடு என்பதால் இன்னும் நீதியின் மீது நம்பிக்கையுடன் இருக்கிறேன். தாமதப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நிதி என்று சொல்வார்கள். தற்போது தாமதப்பட்டுவிட்டது என்று நான் கருதுகிறேன். இதுதவிர சொல்ல ஒன்றும் இல்லை. எனது படங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரச்சினைகள் ஏதும் இன்றி ஓடிக் கொண்டிருக்கிறது. எனது ரசிகர்கள் அமைதி காக்கவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எனக்கு தமிழர்கள் முக்கியம்! – மம்முட்டி
» குடும்பம்தான் எனக்கு மிகவும் முக்கியம் : குஷ்பு
» யாருடன் நடிக்கிறேங்கிறது முக்கியமில்லை; கதைதான் முக்கியம்: அஞ்சலி பேட்டி!
» எனக்கு ஹீரோ முக்கியமல்ல, பேமண்டுதான் முக்கியம்- அஞ்சலியின் அதிரடி
» ஆளும்கட்சியினரால் எனக்கு ஆபத்து! விஜய் பரபரப்பு பேட்டி!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum