தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜய்யின் புதிய படத்துக்கு டைட்டீல் யோசிக்கிறார் ஏ.எல்.விஜய்!

Go down

விஜய்யின் புதிய படத்துக்கு டைட்டீல் யோசிக்கிறார் ஏ.எல்.விஜய்! Empty விஜய்யின் புதிய படத்துக்கு டைட்டீல் யோசிக்கிறார் ஏ.எல்.விஜய்!

Post  ishwarya Sat Mar 30, 2013 12:11 pm

சமீபகாலமாக படங்களுக்கு கதை யோசிப்பதை விட டைட்டீல் யோசிப்பதில்தான் அதிக காலத்தை செலவிடுகிறார்கள் இயக்குனர்கள். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் அதற்கான தலைப்பு என்னவென்று முடிவு செய்யவில்லையாம். அதேபோல் ஏ.எல்.விஜய் இயக்கத்தில விஜய் நடிக்கவுள்ள படத்துக்கும் இன்னும் தலைப்பு வைக்கவில்லை என்கிறார்கள்.

தாண்டவம் படத்தை இயக்கி வந்தபோது, விஜய்யின் புதிய படத்துக்கு தலைவன் என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார் ஏ.எல்.விஜய். ஆனால் அந்த தலைப்பில் ஒரு படம் தற்போது வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் ஏற்கனவே துப்பாக்கி டைட்டீல் பிரச்சினை பூதாகரமாக வெடித்து, அதுவே விஜய்தரப்புக்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்ததால், இந்த முறையும் அதுபோன்ற பிரச்சினை வேண்டாம் என்று தலைவன் டைட்டீலுக்காக பிரச்சினை செய்யப்போவதில்லை. வேறு டைட்டீல் யோசிக்கப்போகிறேன் என்கிறார் ஏ.எல்.விஜய். இம்மாதம் இறுதியில் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக சொல்லும் இயக்குனர், அதற்கு முன்பே டைட்டீலை வெளியிட்டு விடுவேன் என்று தனது இலாகாவுடன் மூளையை கசக்கிக்கொண்டிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum