வருகிறது வசந்த மாளிகை
Page 1 of 1
வருகிறது வசந்த மாளிகை
1972 ல் வசந்த மாளிகை வெளியானது. சிவாஜி கணேசனின் அனைத்து தசைகளும் துடித்து நடிப்பதற்கு வாகான கதை. யாருக்காக என்று அவர் போட்ட அலறலில் தமிழ்நாடு தாண்டி இலங்கையும் கிடுகிடுத்தது. படம் பம்பர்ஹிட்.
இன்றும் இரண்டு மனம் வேண்டும் நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று என தமிழக டாஸ்மாக்கில் யாராவது பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
காதலையும் அதைவிட சோகத்தையும் கசக்கிப் பிழிந்த அந்த காவியம் மீண்டும் வெளியாகிறது. சினிமாஸ்கோப், டிஜிட்டல் என்று இன்றைய பிரமாண்டங்களுடன்.
கர்ணன் பாக்ஸ் ஆபிஸை அசைத்துப் பார்த்ததிலிருந்து சிவாஜி கணேசனின் படங்களின் ரைட்ஸை வைத்திருக்கும் அனைவருக்கும் ரீ ரிலீஸின் மீது கடும் மோகம். வசந்த மாளிகையை வெளியிடுகிறவர் சீனிவாசன்.
இவர்தான் சிவாஜியின் கௌரவம் படத்தையும் முன்பு பெரிய அளவில் வெளியிட்டார். வாணி ஸ்ரீ சிவாஜி ஜோடியாக நடித்த, கே.எஸ்.பிரகாஷ் இயக்கிய அன்றைய பிரமாண்டம் டிசம்பர் 7 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது. கூடவே இலங்கையிலும்.
பெங்களூருவில் சிவாஜி பக்தர்கள் பிரபு ரசிகர்கள் என்ற பெயரில் இன்றும் ஆயிரக்கணக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். சிவாஜி படம் ரிலீசானால் வண்டி பிடித்து பேனர், மாலை, பட்டாசுடன் சென்னை வரும் அளவுக்கு வெறிகொண்ட பக்தர்கள். இவர்களின் பயணச் செலவை குறைக்கும் வகையில் பெங்களூருவிலும் வசந்த மாளிகையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம்.
டிசம்பர் 7 சென்னை சாந்தி தியேட்டருக்கு காலையில் வந்தால் இன்னொரு தீபாவளியை ரசிக்கலாம்.
கதறி அழ கணேசன் ரெடி, உருகி அழ நீங்க ரெடியா?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சினிமாஸ்கோப்பில் வருகிறது ‘வசந்த மாளிகை’
» டிஜிட்டலில் வருகிறது வசந்த மாளிகை
» டிஜிட்டலில் வசந்த மாளிகை
» டிஜிட்டல் கியூப்பில் மாற்றும் பணி முடிந்தது: வசந்த மாளிகை 80 தியேட்டரில் ரிலீஸ்
» வாழ்க்கை மாளிகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum