தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சினிமாஸ்கோப்பில் வருகிறது ‘வசந்த மாளிகை’

Go down

சினிமாஸ்கோப்பில் வருகிறது ‘வசந்த மாளிகை’  Empty சினிமாஸ்கோப்பில் வருகிறது ‘வசந்த மாளிகை’

Post  ishwarya Tue Mar 12, 2013 12:36 pm

சிவாஜி நடித்த ‘வசந்த மாளிகை சினிமாஸ்கோப்பில் ரிலீஸ் ஆகிறது. சிவாஜி நடித்த ‘கர்ணன்‘ படம் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு கடந்த ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து ராமநாயுடு தயாரித்த ‘வசந்த மாளிகைÕ படம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வருகிறது. 1972ம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. இதன்பிறகு 10 முறை ரீ ரிலீஸ் ஆகி உள்ளது. சிவாஜி நடித்த ‘கர்ணன்‘ டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு வரவேற்பு பெற்றதையடுத்து ‘வசந்தமாளிகை‘ படத்தையும் புதுப்பொலிவுடன் ரீரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுபற்றி விநியோகஸ்தர்கள் பி.சீனிவாசன், பி.வி.முரளி கூறியது: வசந்த மாளிகை தமிழகம் முழுவதும் வெளியிடும் அனுமதியை சேலம் ராஜா என்பவர் தயாரிப்பாளர் ராமநாயுடுவிடமிருந்து பெற்றார்.

35 எம்எம் அளவில் வெளியான இப்படம் தற்போது கலர் கரெக்ஷன் செய்யப்பட்டு சினிமாஸ்கோப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டது. பிரசாத் ஸ்டுடியோவில் இதற்கான பணி நடந்தது. வரும் 8ம் தேதி தமிழகம் முழுவதும் 100 பிரின்ட் ரிலீஸ் ஆகிறது. இதுபற்றி சிவாஜி மூத்த மகன் ராம்குமாரிடம் தெரிவித்தபோது வாழ்த்து தெரிவித்தார். பட ரிலீஸ் அன்று சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ரசிகர்கள் தியேட்டருக்கு ஊர்வலமாக செல்கின்றனர். பெங்களூரிலிருந்து 2 கன்டெய்னரில் பூமாலைகள் கொண்டு வந்து கட்அவுட்டுக்கு அணிவிக்கிறார்கள். இதற்காக 40 அடி உயர கட்அவுட் ஆல்பட் தியேட்டரில் அமைக்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum