தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கலெக்சனில் கலக்கும் நயன்தாரா படம்

Go down

கலெக்சனில் கலக்கும் நயன்தாரா படம் Empty கலெக்சனில் கலக்கும் நயன்தாரா படம்

Post  ishwarya Fri Mar 29, 2013 5:46 pm

க்ருஷ் இயக்கத்தில் நயன்தாரா, ராணா நடித்த கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது. க்ருஷ் இயக்கிய முந்தையப் படங்கள் வெற்றி பெற்றதால் இந்தப் படத்துக்கு இன்டஸ்ட்‌ரியில் அமோக எதிர்பார்ப்பு.

படம் யாரையும் ஏமாற்றவில்லை. இந்த ஆக்சன் த்‌ரில்லர், க்ருஷின் படங்கள் ஏ சென்ட‌ரில் மட்டுமே நன்றாகப் போகும் என்ற அபிப்ராயத்தை தவிடு பொடியாக்கியிருக்கிறது. பி, சி சென்டர்களிலும் படம் பட்டையை கிளப்புகிறது. இரண்டு நாட்களில் பத்து கோடி வசூலை தாண்டிவிட்டதாக தயா‌ரிப்பாளர் தெ‌ரிவித்துள்ளார்.

யுஎஸ்-ஸில் இப்படம் ஷாருக்கானின் படத்தையே பின்னுக்கு‌த் தள்ளியுள்ளது. ஜப் தக் ஹை ஜான் சென்ற வார இறுதியில் வசூலித்ததைவிட அதிகம் க்ருஷின் படம் வசூலித்துள்ளது. 31 திரையிடல்களில் 2,14,065 அமெ‌ரிக்க டாலர்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 1.17 கோடி.

இது துப்பாக்கியின் முதல் வார இறுதி வசூலைவிட அதிகம். இந்தத் தெலுங்குப் படம் விரைவில் ஓங்காரம் என்ற பெய‌ரில் தமிழில் வெளியாக உள்ளது.

நயன்தாரா ஸ்ரீராமரா‌ஜ்‌ஜியம் படத்துக்குப் பின் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பின் வந்த முதல் படம் இது. முதல் படமே சூப்பர்ஹிட் என்பதால் கிளவுட் நைனில் இருக்கிறார் நயன்தாரா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum