தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தம்பி ஷங்கரு…. பிறவிப்பயன் அடைந்த பவர் ஸ்டார்

Go down

தம்பி ஷங்கரு…. பிறவிப்பயன் அடைந்த பவர் ஸ்டார் Empty தம்பி ஷங்கரு…. பிறவிப்பயன் அடைந்த பவர் ஸ்டார்

Post  ishwarya Fri Mar 29, 2013 5:18 pm

எந்த நேரம் வேண்டுமானாலும் சிறைப் பறவையாகும் சாத்தியமிருந்தாலும் திரைவானில் உற்சாகமாக சிறகடித்து பறந்து வருகிறார் பவர்ஸ்டார். சமீபத்தில் பெரியவாளெல்லாம் சொல்லக் கூடிய பிறப்பெருங்கடலை நீந்திக் கடந்த பெரும்பயனை இந்தப் பிறவிக் கலைஞன் அடைந்தார்.

வளர்க்க கூப்பிடுறாங்களா இல்லை அறுக்க கூப்பிடுறாங்களா என்பது தெரியாமல் ஓனருக்கு பின்னால் ஒடும் ஆட்டுக்குட்டியை மாதிரி அப்பாவியாக இருக்கிறார் மனுஷன். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் பவர் ஸ்டாரை ஓட்டு ஓட்டென்று ஓட்டியிருக்கிறார் சந்தானம். வசமாக சிக்கிய எலியை ஓடவிட்டு கொல்லும் கேட் அண்ட் மௌஸ் காமெடி விளையாட்டுதான் இந்தப் படம். கேட் சந்தானம் என்றால் மௌஸ் நமது பவர் ஸ்டார். இந்த வெவரம் புரியாமல் திரையுலகில் எனக்கொரு அங்கீகாரம் தந்த தம்பியே என்று ஆடியோ விழாவில் அப்படி உருகினார். விழாவின் சிறப்பு அழைப்பாளர் ஷங்கர். இவரின் ஐ படத்தில் அண்ணன் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார்.

தம்பி ஷங்கரு ஐ படத்தில் எனக்கொரு வேஷம் தந்திருக்கிறார். அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ளணும் என்பது என்னுடைய ஆசை. அவரிடம் சொன்னால், நானே உங்க ரசிகன், உங்ககூட போட்டோ எடுத்துக்கணுங்கிறதுதான் ஐ படமே எடுக்கிறேன்னு சொல்ல அப்படியே ஷாக் ஆயிட்டேன். என்னோட பிறவிப்பயனை அடைஞ்ச மாதிரி இருந்தது என்று அண்ணன் மைக் முன்னாடி உணர்ச்சிவசப்பட நமக்கு அழுகையை அடக்க முடியவில்லை.

நம்மை வச்சு காமெடி பண்றாங்கங்கிற விவரம்கூட தெரியாமல் இவ்ளோ வெள்ளந்தியா இருக்கிறாரே… பச்ச மண்ணுப்பா அது பார்த்து ஹேண்டில் பண்ணுங்க.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum