கரீனா கபூர் 8 நிமிடம் நடனம் ஆட ரூ.1.40 கோடி கொடுத்த சத்தீஷ்கர் அரசு
Page 1 of 1

சத்தீஷ்கர் மாநிலம் உருவானதை கொண்டாடும் விதமாக கடந்த மாதம் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சுற்றுலாத்துறை சார்பில் சத்தீஷ்கர் மாநிலத்தின் எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் இந்த விழா கொண்டாடப்பட்டது.
ராய்ப்பூர் நகரில் பிரபல இந்தி நடிகர்கள், நடிகைகள் பங்கேற்ற பிரமாண்ட நட்சத்திர இரவு நடத்தப்பட்டது. இதற்காகவே மும்பையில் இருந்து பல லட்சம் ரூபாய் செலவு செய்து 245 நடிகர், நடிகைகள், நடன கலைஞர்களை ராய்ப்பூருக்கு அழைத்து சென்றிருந்தனர்.
இந்த விழா கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசின் பணம் தேவை இல்லாமல் செலவழிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து கலைநிகழ்ச்சிக்கு செய்யப்பட்ட செலவு விவரங்களை சத்தீஷ்கர் மாநில சுற்றுலா துறை மந்திரி பிரிஜ்மோகன் அகர்வால் வெளியிட்டுள்ளார்.
ஒரு வாரம் நடந்த விழாவுக்கு மொத்தம் 5 கோடியே 21 லட்சத்து 22 ஆயிரத்து 500 ரூபாய் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் நடிகை கரீனாகபூருக்கு மட்டும் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தனைக்கும் அந்த விழா மேடையில் நடிகை கரீனாகபூர் வெறும் 8 நிமிடங்களே ஆடினார். அந்த 8 நிமிட ஆட்டத்துக்கு ஒரு கோடியே 40 லட்சம் கொடுக்க வேண்டுமா? என்று புகார் கூறப்பட்டுள்ளது.
நடிகை கரீனா கபூருக்கு அடுத்தப்படியாக சோனு நிகாமுக்கு ரூ.36 லட்சம், சுனீதி சவுகானுக்கு ரூ.32 லட்சம், தியா மிர்சாவுக்கு ரூ.25 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர், நடிகைகளை மும்பையில் இருந்து ராய்ப்பூருக்கு அழைத்து வர ரூ.54 லட்சத்து 62 ஆயிரத்து 461 செலவிடப்பட்டுள்ளது. அவர்களது சாப்பாட்டுக்கு ரூ.11 லட்சத்து 67 ஆயிரத்து 956 செலவானதாக கணக்கு எழுதப்பட்டுள்ளது.
நடிகைகளுக்கு லட்சக்கணக்கில் அள்ளி கொடுத்ததை சத்தீஷ்கர் மாநில அரசே ஒத்துக் கொண்டிருப்பதால் சர்ச்சை வலுத்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருமணத்திற்கு அவசரப்படவில்லை: கரீனா கபூர்
» கல்யாணத்திற்கு முன்பே கரீனா கபூர் கர்ப்பமா?
» ஹீரோயின் படத்தில் படு கவர்ச்சியாக கரீனா கபூர்…!
» இஷா தியோல் திருமணத்தை புறக்கணித்த கரீனா கபூர்
» 10-ந்தேதி கரீனா கபூர்- சயீப் அலிகான் நிச்சயதார்த்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum