தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உதயநிதி ஜோடியாக நயன்தாரா நடிக்கும் படம் பிப்ரவரியில் துவக்கம்

Go down

உதயநிதி ஜோடியாக நயன்தாரா நடிக்கும் படம் பிப்ரவரியில் துவக்கம் Empty உதயநிதி ஜோடியாக நயன்தாரா நடிக்கும் படம் பிப்ரவரியில் துவக்கம்

Post  ishwarya Fri Mar 29, 2013 1:48 pm

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் கதநாயாகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பைக் கொடுத்தது.

இதன்பிறகு புதுப்படத்தில் நடிக்க உதயநிதி பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார். இறுதியில் ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய பிரபாகரன் சொன்ன காதலுடன் கூடிய காமெடி கதை பிடித்துப் போனதால் அவருடைய இயக்கத்தில் நடிக்க முடிவு செய்தார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா பெரும் தொகை சம்பளத்துடன் நடிக்க ஒப்புக் கொண்டார். சந்தானம், சூரி ஆகியோரும் நடிக்கின்றனர். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

இந்நிலையில், இவர்கள் இருவரும் இணையும் இப்படத்தின் படப்பிடிப்பை வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் துவங்க திட்டமிட்டுள்ளனாராம். உதயநிதி ஏற்கெனவே நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் முழுக்க சென்னையில் எடுக்கப்பட்டுள்ளதால், இப்படத்தை வெளி நகரங்களில் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக மதுரை, கோவை ஆகிய ஊர்களில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

இப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

நயன்தாரா தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத்துக்கு ஜோடியாகவும், அட்லி இயக்கும் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களுக்கு பிறகு உதயநிதி நடிக்கும் படத்தில் இணைவார் என கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum