தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விளையாட்டு வீராங்கனைகள் சினிமாவில் நடிப்பது தவறில்லை: பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா

Go down

விளையாட்டு வீராங்கனைகள் சினிமாவில் நடிப்பது தவறில்லை: பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா Empty விளையாட்டு வீராங்கனைகள் சினிமாவில் நடிப்பது தவறில்லை: பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா

Post  ishwarya Fri Mar 29, 2013 12:30 pm

விளையாடும் போதும் சரி, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போதும் சரி கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிப்பவர் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா. இவருக்கு 29 வயது ஆகிறது.

ஜூவாலாவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை துளிர்விட்டிருக்கிறது. சென்னையில் பேட்மிண்டன் விளையாட்டு உபகரணங்கள் விற்கும் கடையை திறந்து வைக்க வந்திருந்த ஜூவாலா கட்டா இதை தெரிவித்துள்ளார்.

அழகாக இருக்கிறீர்கள். ஏன் சினிமாவில் நடிக்கக் கூடாது? என்று கேள்வி கேட்ட நிருபர்களுக்கு அவர் பதிலளித்து பேசும்போது, எனக்கு விளையாட வந்த அழைப்பைவிட சினிமாவில் நடிக்க கேட்டு வந்த அழைப்புதான் அதிகம். ஆனால் விளையாட்டில் பிசியாக இருந்ததால் எந்த அழைப்பையும் ஏற்கவில்லை.

விளையாட்டு வீராங்கனைகள் சினிமாவில் நடிப்பதில் தவறு ஒன்றும் இல்லையே. அதனால் 2016-ல் நடைபெறும் ஒலிம்பிக் வரை விளையாடிவிட்டு அதன்பிறகு விளையாட்டிலிருந்து விலக இருக்கிறேன். அதன் பிறகு நல்ல கதையும், நல்ல தயாரிப்பு நிறுவனமும் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum