கண்ணா லட்டு தின்ன ஆசையா – திரைவிமர்சனம்
Page 1 of 1
கண்ணா லட்டு தின்ன ஆசையா – திரைவிமர்சனம்
ஏற்கனவே பாக்யராஜ் நடித்து இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற படமான இன்று போய் நாளை வா படத்தைத் தழுவிதான் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பதால் கதை என்னவோ அதேதான். ஆனால் அதில் வந்த இந்தி வாத்தியார் வேடத்தை இந்தப் படத்தில் பாட்டு வாத்தியாராக காட்டியிருக்கிறார்கள். இது போன்று ஏகப்பட்ட மாற்றங்களையும் கதையிலும் காட்சிகளிலும் செய்திருக்கிறார்கள். படத்தின் கதை என்னன்னா…
சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிற சந்தானம், வெட்டி ஆபிசர்களாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் பவர் ஸ்டார், சேது மூன்று பேரும் நண்பர்கள். சேது வீட்டின் எதிர் வீட்டில் புதிதாக குடித்தனம் வருகிறார்கள் விகாஷா குடும்பத்தினர். விகாசாவைப் பார்த்த மூன்று பேருமே அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். மூன்று பேருமே ஒரே பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாது இல்லையா… அதனால தனித்தனியா ட்ரை பண்றதுன்னு முடிவு செய்கிறார்கள். விகாஷாவை கவர்வதற்காக மூன்று பேரும் தகிடுதித்தம் வேலைகளில் இறங்குகிறார்கள். கடைசியில் யாரை விகாஷா கை பிடித்தார் என்பது க்ளைமேக்ஸ்.
படத்தின் தொடக்கக் காட்சியில் இருந்து கடைசி காட்சிவரை ரசிகர்களை சிரிக்க வைப்பது ஒன்றுதான் குறிக்கோள் என்று நினைத்துவிட்டதால் பட்டாசு மாதிரி காமெடியையும் கொழுத்திப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
சந்தானம் அடிக்கிற ஒவ்வொரு வசனத்திற்கும் விசில் தூள் பறக்கிறது. ரசிகர்களிடம் கைத்தட்டலும் விசிலும் வாங்குவதில் சந்தானத்தை மிஞ்சி விட்டார் பவர் ஸ்டார். இவர் என்ட்ரி கொடுக்கிற காட்சியே அமர்க்களம். ப்ளஸ் டூ பொண்ணுக்கு இவரு நூல் விடுறதும் அதற்கு அந்த பொண்ணு சொல்லிட்டுப் போற பதிலுமான இவரது முதல் காட்சியிலேயே காமெடியில் ரசிகர்களை கதகளி ஆடவிடுகிறார். பவர் ஸ்டாரின் உடல் அசைவுகளுக்கும் முக பாவனைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். அதுவும் அவர் உம்… என்று வைத்துக் கொண்டு முகத்தைக் காட்டுகிற காட்சி இருக்கிறதே… அடேங்கப்பா. இவர்களுடன் வருகிற சேதுவுக்கு இது முதல் படம் என்றாலும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக நடித்திருக்கிறார்.
இன்று போய் நாளை வா படத்தில் கொஞ்சம் அதிகமாகவே சென்டிமென்ட் இருக்கும்; இதனால் ஒவ்வொரு காட்சியும் நம்ம மனதில் இருந்து அகல மறுக்கும் காட்சியாக இருக்கும். ஆனால் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் காமெடி படம் என்பதால் படத்தில் சென்டிமென்டுக்கு வேலையே இல்லை.
மூன்று பேருமே விகாஷா சிங்கை இம்ப்ரஸ் பண்ணுவதற்கு ரொம்பவே மெனக்கெடுகிறார்கள் என்றாலும் விகாஷா நம்மை இம்ப்ரஸ் செய்யாமல் வந்து போகிறார். இவரை பாடலுக்கு ‘அடியே அன்னக்கிளியே’ பாடலுக்கு அரைகுறை ஆடையுடன் ஆட விட்டிருக்கிறார்கள்.
பாட்டு வாத்தியாராக வருகிறார் விடிவி கணேஷ். அவரது மனைவியாக கோவை சரளாவும் பக்கத்து வீட்டு மாமியாக தேவதர்ஷினியும் நடித்திருக்கிறார்கள்.
இரண்டு மூன்று காட்சிகளில் வரும் சிம்பு மூன்று பேருக்குமே நல்ல அறிவுரை சொல்லி அனுப்புகிறார்.
படத்திற்கு இசையமைத்திருக்கிறார் தமன். ஓப்பனிங்கில் வரும் கண்ணா லட்டு தின்ன ஆசையா, அடியே அன்னக்கிளியே, லவ் லெட்டர் பாடல்கள் ரொம்பவே ரசிக்க வைக்கின்றன.
நான் ஸ்டாப் காமெடியுடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கியிருக்கிறார் கே.எஸ். மணிகண்டன்.
சந்தானம், பவர் ஸ்டார் கூட்டணியில் கண்ணா லட்டு தின்ன ஆசையா ரசிகர்களுக்கு சரியான காமெடி பொங்கல் விருந்து.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கண்ணா லட்டு தின்ன ஆசையா
» டிசம்பர் 9ல் கண்ணா லட்டு தின்ன ஆசையா ஆடியோ வெளியீடு
» யு பெற்றது கண்ணா லட்டு தின்ன ஆசையா
» கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு யு சான்றிதழ்
» டிசம்பரில் கண்ணா லட்டு தின்ன ஆசையா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum