திருப்பாவை 19
Page 1 of 1
திருப்பாவை 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.
பொருள்..... குத்து விளக்குகள் ஒளி வீசி எரிகின்றது. யானை தந்தத்தால் செய்யப்பட்ட கட்டிலின் பஞ்சனையில் படுத்து இருக்கும் மலர் மாலை அணிந்த கண்ண பிரானே கொத்து, கொத்தாக மலர்களை கூந்தலில் சூடியுள்ள உன் மனைவி நப்பின்னையின் மார்பின் மீது துயில்கின்றவளே. எங்களுக்கு அருள் புரிவாய். மை தீட்டப்பட்ட விரிந்த கண்களை உடைய நப்பின்னையே மார்பின் மீது துயில்கின்றவனே.
எங்களுக்கு அருள் புரிவாய். மை தீட்டப்பட்ட விரிந்த கண்களை உடைய நப்பின்னையே. நீ உன் கணவன் கண்ணனை தூக்கத்தில் இருந்து எழுப்பி விட மாட்டேன் என்கிறாய். ஒரு நிமிடம் கூட அவனை விட்டு பிரிந்து இருக்க மறுக்கிறாய். இது சரியா? அவனை எழுப்பி விடு. கண்ணனின் அருள் எங்களுக்கு கிடைக்க நீ தடையாக இல்லாமல் எங்கள் குரலை பகவான் கேட்க வழி செய்ய வேண்டும். இதுவே எங்கள் ஆசையாகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum