தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்பாவை 3

Go down

திருப்பாவை 3 Empty திருப்பாவை 3

Post  meenu Thu Mar 28, 2013 4:21 pm

[sஒங்கி உலகுஅளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்
தீங்குஇன்றி நாடுஎல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஒங்கு பெருஞ்செந்நெல் ஊடுகயல் உகள
பூங்குவளைப்போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலைப்பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

பொருள்.... வாமன அவதாரம் எடுத்து தன் திருவடியால் மூவுலகையும் அளந்தவன் ஸ்ரீமன் நாராயணன். பெருமையும், சிறப்பு மிக்க அவனுடைய பெயரை நாம் பாடி, நோன்பைக் கடைப்பிடித்து நீராடினால் நாடு முழுவதும் மாதம் மூன்று முறை மழை பொழியும். வயல் வெளியில் நீர் வளம் பெருகி நெற்பயிர்கள் செழுமையாக உயர்ந்து வளரும்.

அந்த நெற்பயிர்களின் நடுவில் மீன்கள் துள்ளி விடையாடும். கரிய நிறமுடைய குவளை மலர்களில் பொறி வண்டுகள் தேனை குடித்து மெய் மறந்து உறங்கும். வள்ளல் தன்மையுடைய பசுக்கள் ஒயாமல் பால் சுரந்து குடம், குடமாக கொடுக்கும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum