அறுவை சிகிச்சை மூலம் பேச்சு திறனை மீண்டும் பெற்ற சிறுவன்: வேலூர் அரசு டாக்டர்கள் சாதனை
Page 1 of 1

வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்தவர் பாஸ்கரன் பீடி தொழிலாளி. இவரது மனைவி செண்பகம். இவர்களுக்கு காமேஷ் (வயது 4), லோகேஷ் (2) மற்றும் சாஷினி என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது. மூத்த மகன் காமேஷுக்கு மூச்சு திணறல் மற்றும் பேச முடியாமல் சிரமப்பட்டு வந்தான். மகனால் திடீரென பேசமுடியாமல் போனதால் பெற்றோர் மிகவும் அவதிப்பட்டனர்.
இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது தொண்டையில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் இதற்கு அதிக அளவில் பணம் செலவாகும் என்று தெரிவித்துள்ளனர். அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது என்று பெற்றோர் திகைத்த நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிறுவன் காமேஷ் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டான்.
சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் மூச்சுப் பாதையில் சதை வளர்ந்துள்ளது. மூச்சுக் குழலை அடைத்த நிலையில் திராட்சை பழம் அளவுக்கு சதை வளர்ந்துள்ளது. அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றினால் தான் சிறுவனால் மீண்டும் பேச முடியும் என்று கூறினர்.
இதனையடுத்து ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தனர். காது, மூக்கு, தொண்டை சிறப்பு டாக்டர் சிவகுமார் தலைமையில் சிறுவன் காமேஷுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதனையடுத்து சிறுவன் மீண்டும் பேசினான். மகனின் பேச்சை கேட்டு பெற்றோர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இதுகுறித்து கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் கூறியதாவது:-
சிறுவனின் தொண்டையில் ஒரு வகையான வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திராட்சை கொத்து போன்று அப்பகுதியில் சதை வளரத் தொடங்கியது. இதனால் மூச்சு திணறல் மற்றும் பேச முடியாமல் பாதிக்கப்பட்டிருந்தான். தொண்டையில் சிறிய அறுவை சிகிச்சை செய்து அடைப்பு ஏற்படுத்திருந்த சதை அகற்றப்பட்டது. இதனால் சிறுவனுக்கு மீண்டும் பேச்சுத்திறன் கிடைத்தது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் இதுபோன்ற அறுவை சிகிச்சை இதுதான் முதன் முறை என்றார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இருதய அறுவை சிகிச்சை: அப்பல்லோ மருத்துவமனை சாதனை

» 7 வயது சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை - சென்னையில் சாதனை
» இதய அறுவை சிகிச்சை செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், மீண்டும் பிரச்னை வந்து மருத்துவரிடம் சென்றபோது ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். இதற்கு பரிகாரம் ஏதேனும் உள்ளதா?
» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum