தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இருதய அறுவை சிகிச்சை: அப்பல்லோ மருத்துவமனை சாதனை

Go down

இருதய அறுவை சிகிச்சை: அப்பல்லோ மருத்துவமனை சாதனை  Empty இருதய அறுவை சிகிச்சை: அப்பல்லோ மருத்துவமனை சாதனை

Post  meenu Mon Feb 11, 2013 2:19 pm


இருதய அறுவை சிகிச்சையில் தனிச்சிறப்பிடம் பெற்று விளங்கும் அப்பல்லோ குழும மருத்துவமனை அதிநவீன தொழில்நுட்பங்களின் மூலம் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பீட்டிங் (துடிக்கும்) இருதய அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளது.
அப்பல்லோ மருத்துவமனை சாதனை
webdunia photo
WD

சென்னையில் நடைபெற்ற இதற்கான விழாவில், அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பி.சி. ரெட்டி, இருதய அறுவை சிகிச்சை பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர் எம்.ஆர். கிரிநாத் மற்றும் பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.

அப்பல்லோ மருத்துவமனையில் தன்னலமின்றி பணியாற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளனர்.

மருத்துவமனையின் சாதனைகளை விவரித்துப் பேசிய டாக்டர் கிரிநாத், இருதய அறுவை சிகிச்சையில் புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து கண்டுபிடித்து அறிமுகப்படுத்து வருவதாகவும், அறுவை சிகிச்சைக்கான பயிற்சி, கல்வியையும் வழங்கி வருவதாகவும் கூறினார்.

இதனால் இந்தியாவிலேயே இருதய அறுவை சிகிச்சையில் முன்னோடி மருத்துவமனையாக அப்பல்லோ குழுமம் திகழ்வதாகவும் கிரிநாத் தெரிவித்தார்.

டாக்டர் பி. சி. ரெட்டி
webdunia photo
WD
மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி. ரெட்டி பேசுகையில், உலக அளவில் அதிக இருதய நோயாளிகளைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குவது வருந்தத்தக்க விஷயம் என்று குறிப்பிட்டார்.

இருதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து நோயைத் தடுக்க ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், அப்பல்லோ மருத்துவமன இருதய பாதுகாப்பில் முன்னணியில் உள்ளது என்றார்.

கடந்த 20 ஆண்டுகளில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மட்டும் 30 ஆயிரம் இருதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் 22 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் இருதய தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை ஆகும்.

கடந்த ஆறு ஆண்டுகள் வரை இந்த அறுவை சிகிச்சைகள் இருதய நுரையீரல் எந்திர உதவியுடன் வழக்கமான முறையில் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் சமீப காலமாக 90 விழுக்காடு இருதய தமனி அறுவை சிகிச்சைகள் `பீட்டிங் இருதயம்' என்னும் நவீன தொழில்நுட்ப முறையில் நடத்தப்படுகின்றன.

இதன்காரணமாக அறுவை சிகிச்சை முடிந்த பிறகு ஏற்படும் சிக்கல்கள் மற்றும் இறப்பு விகிதம் 0.6 விழுக்காடு அளவிற்கு குறைந்துள்ளன. இவ்வகை அறுவை சிகிச்சைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதுடன், நோயாளிகளும் விரைவில் குணம் அடைவதாக டாக்டர் பி. சி. ரெட்டி கூறினார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum