கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தீவிரம்
Page 1 of 1

கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் மண்டபத்துக்கு அடுத்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உள்ளது. திறந்த வெளியில் சிலை நிற்பதால் கடல் காற்றாலும், மழை மற்றும் வெயிலாலும் சேதம் அடைகிறது. இதை தடுக்க 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலையை சுற்றிலும் ரசாயன கலவை பூசப்படுகிறது.
கடைசியாக 2008-ம் ஆண்டு ரசாயன கலவை பூசப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு திருவள்ளுவர் சிலையை பராமரிக்க தமிழக அரசு ரூ.82 லட்சம் ஒதுக்கீடு செய்தது. சிலையை பராமரிக்க வசதியாக கடந்த 1-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூச முதற்கட்ட பணியாக சிலையை சுற்றி சாரம் அமைக்கும் பணி தொடங்கியது. நெய்வேலியை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக படகுகள் மூலம் 100 டன் இரும்பு கம்பி, பைப், பலகைகள் கொண்டு செல்லப்பட்டு 25 நாட்களாக சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இந்த பணி நேற்றுடன் நிறைவு பெற்றது.
தற்போது சிலை பகுதியில் தொழிலாளர்கள் நின்று பணி செய்யும் வகையில் இரும்பு பலகை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்த பின் வருகிற 1-ந்தேதி முதல் சிலை தண்ணீர் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, சிலையில் உள்ள இணைப்புகள் பழுதுபார்க்கப்படுகிறது. அதன்பின் கெமிக்கல் மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.
தொடர்ந்து சிலையில் படிந்துள்ள உப்பு படிவங்கள் உறிஞ்ச பேப்பர் ஒட்டப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது. பின்னர் வேக்கர் சிலிகான் மெட்டீரியல் மூலம் சிலை முழுவதும் ரசாயன கலவை பூசப்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அழகுச் சிலை கரீனாவுக்கு லண்டனில் மெழுகுச் சிலை
» உடற்பயிற்சியின் தீவிரம்
» ராணா பட வேலை தீவிரம்
» சிம்பு – ஜீவா மோதல் தீவிரம்!??
» மகனை ஹீரோவாக்க ஜெயப்பிரதா தீவிரம்
» உடற்பயிற்சியின் தீவிரம்
» ராணா பட வேலை தீவிரம்
» சிம்பு – ஜீவா மோதல் தீவிரம்!??
» மகனை ஹீரோவாக்க ஜெயப்பிரதா தீவிரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum