தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிம்பு – ஜீவா மோதல் தீவிரம்!??

Go down

 சிம்பு – ஜீவா மோதல் தீவிரம்!?? Empty சிம்பு – ஜீவா மோதல் தீவிரம்!??

Post  ishwarya Tue Apr 16, 2013 12:47 pm

கோலிவுட்டின் சூப்பர் ஹிட் இயக்குனர்களில் ஒருவரான தரணி, குருவி படத்துக்குப் பிறகு இயக்கும் ரீமெக் படம் ஒஸ்தி.

சிம்பு ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளிவர இருக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார். சிங்கிள் மோகம் கொண்ட சிம்பு, வானம் படத்திற்கு வெளியிட்டதைப் போல இந்தப் படத்தின் ஒரு பாடலையும், டிரெய்லரையும் விரைவில் வெளியிட இருக்கிறார்.

இதற்கிடையில் தொடர்ந்து தனது வாய்ப்புகளை கேச் பிடித்து ஜீவா மீது, சிம்பு தனது ஃபேஸ்புக் இணைய தளத்தில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார். ஜீவாவின் ரௌத்திரம் படம் வெளியானதும் பாத்திரிகையாளர்களை சந்தித்த ஜீவா “ சிம்பு எனது நண்பர் அல்ல” என்று விளாசியிருந்தார். அதற்கும் சற்று முன்பு “ சிம்பு எனக்கு வாய்ப்பை விட்டுக் கொடுக்க அவர் என்ன கமலஹாசனா?” என்று கேட்டிருந்தார்.

இவற்றுகெல்லாம் பதிலடி தரு விதத்தில் சிம்பு நேற்று தனது ஃபேஸ்புக் இணையதளத்தில் ஜீவாவின் பெயரைக் குறிப்பிடாமால் கடும் தாக்க்குதல் நடத்தியிருந்தார். அதில் ” நம்மைப் பற்றி தவறாக பேசும் சில பேரின் வாயை மூடவைக்கும் இந்த தீபாவளி ரிலீஸ். ‘ஒஸ்தி’ எனது திரையுலக வாழ்வில் ஒரு பெரிய மாஸ் படம். எனது வசன உச்சரிப்பு, சண்டைக் காட்சிகள், காமெடி மற்றும் எனது நடனம் அனைத்தும் எனது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும்.

சைலண்ட்டா வேலையா பார்ப்போம் சவுண்ட்டா ஜெயிப்போம்.. நீங்கள் எல்லாம் இருக்கீங்க எனக்கு.. அதான் கவலை மத்தவங்களுக்கு! ” என்று தெரிவித்துள்ளார்.

கோ திரைப்படத்தில் சிம்பு நடிக்க வேண்டிய வேடத்தை ஜீவா பறித்துக் கொண்டார் என்பதற்காக மட்டுமல்ல. அதே மாதிரி இன்னொரு படத்திலும் கை வைத்துவிட்டாரே என்பதுதான் சிம்புவின் கடும் கோபத்துகுக் காரணம் என்கிறார்கள்.

அது நண்பன் பட வாய்ப்பு. தற்போது மிஷ்கின் இயக்கும் முகமுடி வாய்ப்பு சிம்புவின் கைக்குத்தான் வந்து சேர்ந்தது. இது போதாதென்று கவுதம் வேறு இன்னோரு வின்னைத்தாண்டி வருவாயா படத்தைப் போல ஜீவாவை வைத்து ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தை இயக்கி வருகிறார்.

இது போதாதா? சிம்பு ஜீவா மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருகிறது. இவர்கள் சண்டையை விட்டு விட்டு தங்கள் ரசிகர்களின் ரசனையை மேம்படுத்தும் படத்தில் நடிப்பதே சினிமாவுக்கு நல்லது. அநேகமாக அதை ஜீவா சரியாக செய்து கொண்டிருகிறார் என்கிறார்கள் விமர்சகர்கள்..! சிம்பு நீங்க?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum