குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாகிறது: திருவள்ளூர் நகராட்சி பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு
Page 1 of 1

திருவள்ளூர் அருகே உள்ள வெள்ளியூரில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் சாலை நடுவில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு அதன் மூலம் திருவள்ளூர் நகராட்சி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
குடிநீர் குழாய் தரமானதாகவும் ஆழமாகவும் பதிக்கப்படாததால் திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில் பல இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் முழுவதும் வீணாகிறது. இதனால் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் பொது மக்கள் குடிநீரின்றி கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தியும், நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. குடிநீர் குழாய் உடைந்து சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி கிடப்பதால் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இரவில் 2 சக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர்.
சாலை சரியில்லாததால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் எதிர்திசையில் தவறான பாதையில் செல்கின்றது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே உடைந்த குடிநீர் குழாயையும் சாலையையும் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாகிறது: திருவள்ளூர் நகராட்சி பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு

» திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில்
» மும்பையில் குருக்களுக்குத் தட்டுப்பாடு
» திருவள்ளூர் வீரராகவர் கோயில் தை பிரம்மோற்சவம் துவக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum