தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலையாள நடிகை மஞ்சு வாரியார் மீண்டும் நடிக்க திட்டமா?: நாகர்கோவிலில் பேட்டி

Go down

மலையாள நடிகை மஞ்சு வாரியார் மீண்டும் நடிக்க திட்டமா?: நாகர்கோவிலில் பேட்டி Empty மலையாள நடிகை மஞ்சு வாரியார் மீண்டும் நடிக்க திட்டமா?: நாகர்கோவிலில் பேட்டி

Post  ishwarya Thu Mar 28, 2013 1:49 pm

பிரபல மலையாள நடிகர் திலீப். இவரது மனைவி மஞ்சுவாரியார். இவரும் ஏராளமான மலையாள படங்களில் நடித்த பிரபல நடிகையாவார். இவர் திருமணத்துக்கு பின் நடிக்க வில்லை. இந்த தம்பதிக்கு 13 வயதில் மீனாட்சி என்ற மகள் உள்ளார். கணவர்-குழந்தையுடன் மஞ்சுவாரியார் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார்.

குச்சுப்பிடி நடன நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். சமீபத்தில் குருவாயூரில் விஜயதசமி அன்று மஞ்சு வாரியாரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் நாகர்கோவில் வந்த மஞ்சு வாரியார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் திருவனந்தபுரம் வரும்போதெல்லாம் நாகர்கோவில் வருவது வழக்கம். அதன்படி இன்று நாகர்கோவில் வந்துள்ளேன். என்னைப் போலவே எனது மகள் மீனாட்சிக்கும் நடனத்தில் ஆர்வம் அதிகமாக உள்ளது. அவர் தற்போது பரத நாட்டியம் கற்று வருகிறார். அவரை சினிமாவில் நடிக்க வைக்கும் எண்ணம் இல்லை.

நான் நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல நடன கலைஞர் சாருதாவிடம் பரதம், மோகினி, கதகளி, குச்சுப்பிடி போன்ற நடனங்களை கற்றேன். 3 வயதில் இருந்தே நடனம் கற்றேன். குருவாயூர் கோவில் உள்பட பல கோவில்களில் நடன நிகழ்ச்சி நடத்தி உள்ளேன். நடிகர் கமலஹாசன் உலக நாயகனாக திகழ்ந்து வருகிறார். இவர் நடித்த `விஸ்வரூபம்’ படத்தை நான் பார்க்கவில்லை. படம் பார்க்காமல் அதுபற்றி கருத்து கூற முடியாது.

பாடகி ஜானகி பத்மபூஷன் விருது வேண்டாம் என்று அறிவித்திருப்பது அவரது தனிப்பட்ட விஷயம். டெல்லி மாணவிக்கு நடந்த பாலியல் பலாத்காரம் ஒரு கொடூர சம்பவம் ஆகும். எனது கணவர் திலீப் தற்போது `சவுண்டு தோமே’ என்ற படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார். அவரது சினிமா வாழ்க்கையில் நான் குறுக்கிட மாட்டேன். நான் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவேனா? மாட்டேனா? என்பது பற்றி இப்போது கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது நடன ஆசிரியர் சாருதா உடன் இருந்தார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum