மலையாள படங்களில் நடிகை ரீமா கல்லிங்கல் நடிக்க தடை
Page 1 of 1
மலையாள படங்களில் நடிகை ரீமா கல்லிங்கல் நடிக்க தடை
பரத் ஜோடியாக “யுவன் யுவாதி” தமிழ் படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார்.
மலையாள நடிகர், நடிகைகள், டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்க கேரள திரைப்பட வர்த்தக சபை தடை விதித்து உள்ளது. இதனால் நடிகர், நடிகைகள் யாரும் டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. டெலிவிஷனுக்காக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும் இல்லை.
ஆனால் ரீமா கல்லிங்கல் இதை மீறி “மிடுக்கி” என்ற மலையாள டி.வி. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மலையாள நடிகர்கள் சித்திக், ஜெகதீஷ் ஆகியோர் டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர். தடை விதிக்கப்பட்டதும் அதில் இருந்து விலகினர். ஆனால் ரீமா கல்லிங்கல் மட்டும் தடையை பொருட்படுத்தாமல் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதையடுத்து மலையாளப் படங்களுக்கு ரீமா கல்லிங்கலை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று கேரள திரைப்பட வர்த்தக சபை அதிரடி தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
நடிகர் சுரேஷ் கோபியும் டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். டி.வி. நிகழ்ச்சிகளை முடித்த பிறகே சினிமாவில் நடிப்பேன் என்று அறிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மலையாள படங்களில் நடிகை ரீமா கல்லிங்கல் நடிக்க தடை
» பெண்ணை இழிவுபடுத்தும் வேடத்தில் நடிக்க மாட்டேன் : ரீமா கல்லிங்கல் பேட்டி
» மலையாள நடிகை மஞ்சு வாரியார் மீண்டும் நடிக்க திட்டமா?: நாகர்கோவிலில் பேட்டி
» தடை தாண்டிய ரீமா கல்லிங்கல்
» ரீமா சென்-ஷிவ்கரன் சிங் திருமணம் முடிந்தது! தொடர்ந்து நடிக்க ரீமா முடிவு!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum