தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோலிவுட்டுக்கு மீண்டும் வருவேன் என்று நினைக்கவில்லை : நடிகை விசாகா சிங் பேட்டி

Go down

கோலிவுட்டுக்கு மீண்டும் வருவேன் என்று நினைக்கவில்லை : நடிகை விசாகா சிங் பேட்டி  Empty கோலிவுட்டுக்கு மீண்டும் வருவேன் என்று நினைக்கவில்லை : நடிகை விசாகா சிங் பேட்டி

Post  ishwarya Wed Mar 13, 2013 1:33 pm

‘தமிழ் படத்தில் மீண்டும் நடிப்பேன் என நினைத்துப்பார்க்கவில்லை’ என்றார் விசாகா சிங். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட ஹீரோயின் விசாகா சிங் கூறியதாவது: ‘பிடிச்சிருக்கு’ படம் மூலம் தமிழில் அறிமுகமானேன். அதன்பிறகு இந்தி, கன்னடம், ஆங்கில படங்களில் நடிக்கச் சென்றுவிட்டேன். மீண்டும் தமிழில் நடிக்க வருவேன் என்று எண்ணவில்லை. ஆனால் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. 3 பேர் என்னை காதலிப்பதுபோல் கதை. ரொம்பவும் ஜாலியான ஷூட்டிங். ஒவ்வொரு காட்சியிலும் தேவதைபோல் அழகாக இருக்க வேண்டும் என்பதால் காஸ்டியூம் முதல் மேக்கப் வரை என் மீது கவனம் எடுத்துக்கொண்டனர்.

விக்ரம்பட் இயக்கும் இந்தி படம் மற்றும் ஃபரான் இயக்கும் ‘பக்ரே’ படங்களில் நடிக்கிறேன். இது எனது அதிர்ஷ்டம். வீட்டில் அடைந்துகிடக்க எனக்கு பிடிக்காது. டூர், எழுதுவது, நடனம், சமையல் பிடிக்கும். மும்பையில் என் தோழி வீட்டுக்கு ஒருமுறை சென்றபோது ஆஷ்தோஸ் இயக்கும் படமொன்றின் நடிகை தேர்வுக்காக செல்லும்படி தோழி கூறினார். அதில் நான் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் ஷாருக்கான் அருகில் என்னை ஜோடி சேர்த்தபோது நான் ரொம்ப சின்னப்பெண்ணாக காட்சி தந்தேன். அந்த சம்பவம்தான் என்னை நடிப்பில் ஆர்வம் காட்ட வைத்தது. சில வருடங்கள் கழித்து ஆஷ்தோஸ் என்னை அழைத்தார். புதிய படத்தில் எனக்கு வாய்ப்பு தந்தார். 2011ம் ஆண்டு இப்படம் ஆங்கில பத்திரிகையொன்றின் விருதுக்காக தேர்வானது. இவ்வாறு விசாகா சிங் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சினிமாவுக்கு வருவேன் என நினைக்கவில்லை : கடல் நாயகி துளசி
» ஜாலிக்காக நடித்தேன்! லட்டு தின்ன ஆசையா விசாகா சிங்
» சுவிட்சர்லாந்துக்கு வரக்கூடாது என்று எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது: நடிகை சங்கீதா- பாடகர் கிரிஷ் பேட்டி
» மலையாள நடிகை மஞ்சு வாரியார் மீண்டும் நடிக்க திட்டமா?: நாகர்கோவிலில் பேட்டி
» மீண்டும் கோலிவுட்டுக்கு வருகிறார் அசின்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum