அமிதாப் பச்சன் மீதான மத அவமதிப்பு வழக்கு தள்ளுபடி: அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு
Page 1 of 1

உத்தரபிரதேசம் மாநிலம், பண்டல் காண்ட் அருகிலுள்ள ஜான்சி பகுதியை சேர்ந்தவர் முதாசீருல்லா கான். இவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒளிபரப்பப்பட்ட ‘கோன் பனேகா குரோர்பதி’ என்ற நிகழ்ச்சியில் பேசும் போது ‘ரச்சா கயா’ என்று கூறி குர் ஆன் எழுதப்பட்டது என்ற அர்த்தம் தொணிக்கும்படி பேசியுள்ளார்.
குர் ஆன் எழுதப்பட்டதோ, உருவாக்கப்பட்டதோ அல்ல. அது அல்லாவால் அருளப்பட்ட புனித வேதம். இதை புரிந்துக் கொள்ளாமல், குர்ஆன் எழுதப்பட்டது என்று தவறான கருத்தை பரப்பிய அமிதாப் பச்சன் பேச்சு இஸ்லாமியர்களின் உணர்வை புண்படுத்தியுள்ளது. எனவே, அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவர் கூறியிருந்தார்.
ஓராண்டு மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
‘ரச்சா கயா’ என்று கூறுவதால் எழுதப்பட்டது என்று கூறியதாக புரிந்துக் கொள்ளக்கூடாது. அந்த சொல்லுக்கு அல்லாவால் தொகுக்கப்பட்டது என்றும் பொருள் கொள்ளலாம். மனுதாரர் சரியாக யோசிக்காமல் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக எந்த பள்ளியோ, மதரசாவோ, இஸ்லாமிய அமைப்புகளோ ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் யாரும் மதக்கட்டுப்பாடு (பத்வா) எதுவும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், தனிப்பட்ட ஆதாயத்துக்காக மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்கிறேன்.’ என்று நீதிபதி மிஷ்ரா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமிதாப் பச்சன் மீதான மத அவமதிப்பு வழக்கு தள்ளுபடி: அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு
» தமிழ் படத்தில் அமிதாப் பச்சன்….?
» சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அமிதாப் பச்சன்
» ஐஸ்வர்யா மூலம் பேரன்தான் பிறப்பான்-அமிதாப் பச்சன் நம்பிக்கை!
» ரஜினி இந்திய மண்ணின் நிஜமான மைந்தன்-அமிதாப் பச்சன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum