தமிழகத்திலேயே இருந்து கமல் கலைச்சேவை செய்யவேண்டும்: நடிகர் கே.ராஜன்
Page 1 of 1

தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவர் நடிகர் கே.ராஜன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர் கமலஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடும் விவகாரத்தில் முஸ்லிம் அமைப்புகளை அழைத்து பேசி அவர்களுடைய கருத்துக்களை ஏற்று இருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை.
ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. எந்த அரசும் ஒரு கலைஞனுக்கு நஷ்டம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் படாது. தனிமனித இழப்பை காட்டிலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையினால் ஒரு நாட்டுக்கே இழப்பு ஏற்படும் என்பதால் தான் சில நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து இருக்கிறது.
நடிகர் கமலஹாசன் முஸ்லிம் மக்களை பாதிக்கும் வகையில் படம் எடுக்கவில்லை என்று குறிப்பிடுகிறார். அப்படியானால் அந்த படத்தில் ஆப்கானிலும், அமெரிக்காவிலும் உள்ள தீவிரவாதி மதுரைக்கும், கோவைக்கும் வருவதாக காட்ட வேண்டிய அவசியமில்லை.
முஸ்லிம்கள் புனிதமாக மதிக்கும் திருக்குரானை பற்றிய காட்சிகளையும் படத்தில் இணைத்து இருக்க வேணடாம். கமல் அடுத்து ஹாலிவுட்டில் படம் எடுக்க திட்டமிட்டு இருப்பதால், அமெரிக்காவின் நன்மதிப்பை பெறு வதற்காகவே இதுபோன்ற படம் எடுத்து இருக்கிறார் என்று மக்கள் பேசி கொள்கின்றனர்.
எழுத்து சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் இருந்தாலும் அடுத்தவர்கள் மனதை புண்படுத்தாமல் படம் எடுக்க வேண்டும் என்பது கமலுக்கு நன்றாக தெரியும்.
தற்போது இந்த விவகாரம் ஜே.எம்.ஆருண் எம்.பி.யின் முயற்சியால் சுமூகமாக முடியும் நிலையில் உள்ளது. இஸ்லாமிய தலைவர்களை அழைத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக கமல் ஒப்பு கொண்டு உள்ளார்.
ஆகவே விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் வெளி வந்து நன்றாக ஓடும். இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக தமிழகம் விளங்குகிறது. ஆகவே நடிகர் கமல் வெளி நாட்டுக்கு செல்ல கூடாது.
அவர் இங்கேயே தங்கி இருந்து கலைச்சேவை செய்ய வேண்டும். சென் சார்போர்டும் சில நேரங்களில் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. வட மாநில படங்களில் முத்தம், ரத்தம் போன்ற காட்சிகளுக்கு தாராளமாக அனுமதிக்கிறார்கள்.
அதேநேரத்தில் தமிழக சிறிய படங்களுக்கு அனு மதிப்பதில்லை. ஆனால் பெரிய நடிகர்களின் படங்களுக்கு அனுமதிக்கிறார்கள். இந்தியாவில் ஒரே மாதிரியான சென்சார் போர்டு வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழகத்திலேயே இருந்து கமல் கலைச்சேவை செய்யவேண்டும்: நடிகர் கே.ராஜன்
» கமல் ரசிகர்கள் என்னை மிரட்டுகிறார்கள்… தயாரிப்பாளர் கே.ராஜன் புகார்
» கமல் ரசிகர்கள் கொலை மிரட்டல் - கே.ராஜன் புகார்
» நடிகர் சங்கத்தில் இருந்து குமரி முத்து நீக்கம்?
» நடிகர் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கம்?: ராதாரவி பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum