மலேசியாவில் நாதஸ்வரம்
Page 1 of 1
மலேசியாவில் நாதஸ்வரம்
சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நாதஸ்வரம் தொடர், மலேசிய கதைக் களத்தில் பயணிக்கவிருக்கிறது. இதற்காக தொடரின் இயக்குனர் திருமுருகன் உள்ளிட்ட குழுவினர் மலேசியாவில் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். கதைப்படி நாதஸ்வரம் வாசிக்க வந்த அழைப்பை சொக்கலிங்கம் குடும்பம் ஏற்கிறது. அதற்காக சொக்கலிங்கமும் கோபியும் மலேசியாவுக்கு தங்கள் குழுவினருடன் பயணப்பட வேண்டும். இந்த பயணத்தில் தன்மனைவி மலரை எப்படியாவது அழைத்துப் போய் விடலாம் என கோபி முயற்சி மேற்கொள்கிறான். ஆனால் அந்த முயற்சியை தன் சாமர்த்தியத்தால் தடுத்து விடுகிறாள் கோபியின் தாயார். மலேசியாவுக்கு போனபிறகு தான் அம்மாவின் இந்த திட்டமிட்ட தடுப்புக்குப் பின்னான விஷயம் கோபிக்கு தெரிய வருகிறது. அதாவது அம்மாவுக்கு மலேசியாவுக்கு வர வேண்டும் என்ற ஆசை உள்ளூர இருந்திருக்கிறது. இதனால் அம்மாவின் அந்த உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோபி தன் அம்மா மலேசியா வர எற்பாடு செய்கிறான்.
மலேசியாவில் தான் கோபியின் குடும்பத்திற்குள் அதுவரை நிகழாத ஒரு திருப்பம் ஏற்படுகிறது. காணாமல் போன கோபியின் அண்ணனை கோபி அங்கே தான் சந்திக்கிறான். இதில் முக்கியமான விஷயம், கோபிக்கு அவர் தான் தன் அண்ணன் என்பது தெரியாது. அண்ணனுக்கும் அதே நிலை தான். யாரென்று தெரியாமலே அவர்கள் நட்பு பாராட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் அண்ணன்-தம்பி என்பது தொடரை பார்க்கும் நேயர்களுக்குத் தெரியும். திருப்பமான இந்த காட்சியில் அடுத்தடுத்து சந்திப்பு தொடரும்போதாவது அவர்கள் அண்ணன்-தம்பி தான் என்பதை தெரிந்து கொண்டார்களா? அதற்கான வாய்ப்பு அமைந்ததா? கோபியின் அண்ணன் வருகைக்குப் பிறகு தொடர் இன்னொரு கோணத்தில் விறுவிறுப்பை தக்க வைத்துக் கொண்டு தொடர்கிறது என்கிறார், தொடரின் இயக்குனர் திருமுருகன். இந்த தொடரில் கோபி வேடத்தையும் இயக்குனரே செய்வது சிறப்பு.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மலேசியாவில் விஸ்வரூபம் தடை நீங்கியது!
» மலேசியாவில் பிரியாணி கூட்டணி
» மலேசியாவில் ஹிண்ட்ராஃப் மீதான தடை நீக்கம்
» மலேசியாவில் சும்மா நச்சுனு இருக்கு
» விஸ்வரூபம்: மலேசியாவில் விதிக்கப்பட்ட தடை நீக்கம்
» மலேசியாவில் பிரியாணி கூட்டணி
» மலேசியாவில் ஹிண்ட்ராஃப் மீதான தடை நீக்கம்
» மலேசியாவில் சும்மா நச்சுனு இருக்கு
» விஸ்வரூபம்: மலேசியாவில் விதிக்கப்பட்ட தடை நீக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum