மலேசியாவில் ஹிண்ட்ராஃப் மீதான தடை நீக்கம்
Page 1 of 1

மலேசியாவில் விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையிலேயே தமது அமைப்பின் மீது நான்கு ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணம் என்று அதன் தலைவர் வேதமூர்த்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அந்தத் தேர்தலில் மலேசிய இந்திய வாக்காளர்களின் ஆதரவு ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி ஆகிய இருதரப்பினருக்கும் தேவைப்படும் சூழலிலேயே தடை நீக்கம் வந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார்.
தொடர்புடைய விடயங்கள்
உலகம்,
மனித உரிமை
அதேவேளை மூன்று மாதங்களுக்கு முன்பு தமது அமைப்பு ஐந்து வருட செயல்திட்டத்தை அறிவித்தது என்றும், அதன் அடிப்படையில் எக்கட்சி இந்திய வம்சாவளி மக்களின் நலன்களை முன்னெடுக்க எழுத்துபூர்வமாக உத்தரவாதம் கொடுக்கிறதோ அத்தரப்புக்கே ஹிண்ட்ராஃப் ஆதரவு வழங்க முன்வரும் எனவும் வேதமூர்த்தி சுட்டிக்காட்டுகிறார்.
ஹிண்ட்ராஃப் தடை நீக்கம் - வேதமூர்த்தி பேட்டி
மலேசியாவில் ஹிண்ட்ராஃப் அமைப்பின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நீக்கப்பட்டுள்ளது.
கேட்கmp3
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
மாற்று மீடியா வடிவில் இயக்க
ஆளும் தரப்பும் தங்களைப் பேச்சுவார்த்தைகளுக்கு வருமாறு அழைத்ததாகவும், ஆனால் தடையை நீக்கினால் மட்டுமே அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் என தமது தரப்பு வலியுறுத்தியது எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
நிபந்தனைகள்
மலேசியாவில் நாடற்ற நிலையில் இருக்கும் சுமார் மூன்றரை லட்சம் இந்திய வம்சாவளி மக்களுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்பட வேண்டும், அங்குள்ள 523 தமிழ் பள்ளிகளுக்கு மலாய் முஸ்லிம் பள்ளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் மற்றும் காவல் நிலையத்தில் தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டு மரணமடையும் சம்பவங்கள் முற்றாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பது உட்பட பல விடயங்ள் தமது ஐந்து வருட செயற்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமது அமைப்பின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளமை ஹிண்ட்ராஃப் அமைப்பின் மனித உரிமை போராட்டங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் எனவும் வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மலேசியாவில் ஹிண்ட்ராஃப் மீதான தடை நீக்கம்

» விஸ்வரூபம்: மலேசியாவில் விதிக்கப்பட்ட தடை நீக்கம்
» மலேசியாவில் நாதஸ்வரம்
» மலேசியாவில் அரிய யானைகள் மர்மச் சாவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum