கும்கி கும்கி கும்கி
Page 1 of 1
கும்கி கும்கி கும்கி
நடிகர்கள்:
விக்ரம் பிரபு–லட்சுமி மேனன்.
இசை:
டி.இமான்
ஒளிப்பதிவு:
சுகுமார்
இயக்கம்:
பிரபு சாலமன்.
தயாரிப்பு:
திருப்பதி பிரதர்ஸ்.
கதையின் கரு: ஒரு யானைப்பாகனின் காதல்.
அந்த மலை கிராமத்துக்குள் அடிக்கடி வந்து அட்டகாசம் செய்கிறது, கொம்பன் என்ற காட்டு யானை. கிராமத்து மக்களின் வாழ்வாதாரங்களை சேதப்படுத்துவதுடன், உயிர் பலியும் கேட்பதால், அதை ஒரு ‘பேய்’ என்கிறார்கள்.
(இப்படி பயமுறுத்தும் காட்டு யானைகளை விரட்டியடிக்க, இன்னொரு யானையை பயன்படுத்துகிறார்கள். அதற்கு பெயர்தான் ‘கும்கி’ யானை.)
கொம்பனை விரட்டுவதற்கு, ஒரு கும்கி யானையை தேடுகிறார்கள், அந்த மலை கிராமவாசிகள். கும்கி யானைப்பாகனின் குடும்பத்தில் பிரச்சினை என்பதால், இரண்டு நாட்கள் மட்டும் சமாளிப்பதற்காக, கோவில் யானையுடன் அந்த கிராமத்துக்கு போகிறார், பாகன் விக்ரம் பிரபு. ஊர் தலைவரின் மகள் லட்சுமி மேனனின் அழகில், மனதை பறிகொடுக்கிறார்.
இருவருக்கும் இடையே காதல் வளர்கிறது. இருநூறு வருடங்களாக காதல் இல்லாமல் ஊர் கவுரவத்தையும், கட்டுப்பாடுகளையும் கட்டிக்காப்பாற்றும் ஊர் தலைவர், அவருடைய மகளின் காதலை ஏற்றாரா? என்ற கேள்விக்கும், கொம்பனை விக்ரம் பிரபுவின் கோவில் யானை விரட்டியடித்ததா, இல்லையா? என்ற கேள்விக்கும் விடையளிக்கிறது, ‘கிளைமாக்ஸ்.’
‘நடிகர் திலகம்’ சிவாஜியின் பேரன்–பிரபுவின் மகன் என்ற கவசங்களுடன் அறிமுகமாகியிருக்கிறார், விக்ரம் பிரபு. களையான முகமும், கம்பீரமான இளமையும் இவருக்கு, பிளஸ். தனது யானையை போலீஸ் காவலில் இருந்து மீட்பதற்காக அதிகாரியிடம், ‘‘அய்யா, நான் இல்லைன்னா அது சாப்பிடாதுங்க’’ என்று குரல் உடைந்து கண் கலங்கும் இடத்திலும், ‘‘நீங்க மூணு பேரும் போயிட்டீங்கன்னா எனக்கு யாரு இருக்கா? என்று கதறும் காட்சியிலும் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார், தாத்தாவைப்போல்...
மலைவாழ் கிராமத்து பெண்ணாக மனசை எல்லாம் வசீகரிக்கிறார், லட்சுமி மேனன்.
விக்ரம் பிரபுவின் தாய் மாமனாக–உதவி பாகனாக தம்பி ராமையா படம் முழுக்க கலகலப்பூட்டி, கடைசியில் உருக வைக்கிறார். இது, கும்கி யானை இல்லை என்று கிராமவாசிகள் கண்டுபிடித்து விடுவார்களோ என்று அவர் பயந்து நடுங்கும் ஒவ்வொரு சீன்களும் சிரிக்க வைக்கின்றன.
இவரும், ‘உண்டியல்’ அஸ்வினும் கவுண்டமணி–செந்தில் மாதிரி, நல்ல (காமெடி) கூட்டணி.
ஊர் தலைவராக வரும் ஜோ மல்லூரி, அவருடைய அண்ணனாக வரும் ஜூனியர் பாலையா, ஒரிஜினல் கும்கி யானைப்பாகனாக வரும் ‘யார்’ கண்ணன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
படத்தின் மிக சிறந்த அம்சங்கள் இசையும், படப்பிடிப்பும். ‘‘அய்யய்யோ ஆனந்தமே...,’’ ‘‘சொய்ங் சொய்ங்’’ ஆகிய இரண்டு பாடல்களும் டி.இமான் இசையில், முணுமுணு ரகம்.
பசுமை போர்த்திய மலைகள், பயமுறுத்தும் அடர்ந்த காடுகள், வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் ஆங்காரமாய் சீறிப்பாய்ந்து வரும் அருவிகள் என இயற்கையின் அத்தனை அழகையும் அள்ளி வந்து இருக்கிறது, சுகுமாரின் காமிரா.
காட்டுக்குள் நடக்கும் பயங்கர காட்சியுடன் கதையை ஆரம்பிக்கிறார், டைரக்டர் பிரபு சாலமன். அந்த முதல் காட்சியில் இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அவர், அதன் பிறகு, ‘காமெடி’ ரூட்டுக்கு மாறி விடுகிறார். இடைவேளை வரை காதலும், காமெடியுமாக கதை நகர்வதை தவிர்த்து, திகிலையும், திருப்பங்களையும் அதிகப்படுத்தியிருந்தால், படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
இடைவேளைக்குப்பின், விக்ரம் பிரபு–லட்சுமி மேனன் காதல் என்ன ஆகும்? என்ற பதற்றத்தை ஏற்படுத்தி, கிளைமாக்சில், ‘கிராபிக்ஸ்’ உபயத்தில் படத்தை முடித்து இருக்கிறார். ‘யார்’ கண்ணன் சொல்கிற யுக்தியின்படி, அந்த கோவில் யானைக்குள் வீரத்தை விதைத்து, கொம்பனுடன் மோத விட்டு இருந்தால், ‘கும்கி’யின் சாகசங்களை ரசிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கும்கி கிளைமாக்ஸ்
» கும்கி பட முன்னோட்டம்
» கைமாறுகிறது கும்கி?
» கும்கி கிளைமாக்சில் கிராபிக்ஸ் ஏன்?
» கும்கி' நாயகியோடு சசிக்குமார்!
» கும்கி பட முன்னோட்டம்
» கைமாறுகிறது கும்கி?
» கும்கி கிளைமாக்சில் கிராபிக்ஸ் ஏன்?
» கும்கி' நாயகியோடு சசிக்குமார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum