கும்கி கிளைமாக்சில் கிராபிக்ஸ் ஏன்?
Page 1 of 1
கும்கி கிளைமாக்சில் கிராபிக்ஸ் ஏன்?
சென்னை : ‘கும்கி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் சுகுமார், கூறியதாவது: ‘லாடம்’ படத்தில் அறிமுகமாகி பல படங்களில் பணியாற்றி இருந்தாலும் மைனாவும், கும்கியும் எனக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இரண்டிலுமே காட்சி அமைப்புக்கு முக்கியத்துவம் இருந்தது. அதனால் சிறப்பாகப் பணியாற்ற முடிந்தது. கும்கியில் யானையுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். நானும் அதனுடன் பழகி நட்பாகிய பிறகுதான் படம் பிடிக்க முடிந்தது.
மனிதர்கள் ஒளிப்பதிவாளரின் மார்க், மற்றும் லைட்டிங்கை புரிந்து கொண்டு நடிப்பார்கள். ஆனால் விலங்குகள் அப்படி இல்லை. அதன் போக்கிற்கு ஏற்ப நாம்தான் பணியாற்ற வேண்டும். கும்கியில் பலராலும் பாரட்டப்படும் அருவிக் காட்சி உயிரை பணயம் வைத்து எடுக்கப்பட்டது. என்னதான் ஒளிப்பதிவாளர் திறமையானவராக இருந்தாலும் இயக்குனரின் கற்பனை வளம் சரியாக இருந்தால்தான் திறமையை முழுமையாக பயன்படுத்த முடியும். அந்த வகையில் பிரபு சாலமனின் கற்பனையை காட்சிப்படுத்தி இருக்கிறேன்.
கிளைமாக்சில் யானைகளின் சண்டைக் காட்சியை நிஜமாகவே படமாக்க எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தோம். ஆனால் விலங்கு நல வாரியம் அனுமதி தராது என்பதாலும், தணிக்கை குழு அனுமதிக்காது என்பதாலும் கிராபிக்சில் உருவாக்கினோம். தற்போது ‘நிமிர்ந்து நில்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறேன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கும்கி பட முன்னோட்டம்
» கேரளாவில் கிராபிக்ஸ் காட்சிகள்
» கிராபிக்ஸ் பண்ண 10 கோடி ! : ஏழாம் அறிவு
» நயனதாராவின் உதட்டோர மச்சத்தை கிராபிக்ஸ் போர்வை போட்டு மூடிய இயக்குநர்
» கும்கி கும்கி கும்கி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum