கொளஞ்சியப்பர் கோவில்
Page 1 of 1
கொளஞ்சியப்பர் கோவில்
ஸ்தல வரலாறு....
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலத்திலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில மணவாளநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது இந்த கோவில். கொளஞ்சியப்பர் கோவிலுக்கு சென்றவுடன் கோவிலுக்கு வெளிபுறத்தில் வீரானார் சன்னதி உள்ளது.
இதையடுத்து கோவிலின் கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வலது புறத்தில் உற்சவமூர்த்திகளுக்கு சன்னதியும், யாகசாலை அறையும், சித்தர் சன்னதியும், சேவல், தானியங்கள் காணிக்கை இடமும் உள்ளது. இதையடுத்து கோவில் உள்மண்டபத்தில் சித்தி விநாயகர் கொளஞ்சியப்பர் மூலவர் சன்னதி அமைந்துள்ளது.
கோவில் உள்மண்டபத்தின் பின்னால் மான்கள், மயில்கள் வளர்க்கும் இடம், இடும்பன், கம்பன் சாமி சன்னதியும் உள்ளது. கொளஞ்சியப்பர் கோவிலில் ஒவ்வொரு கிருத்திகை, பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இதில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
கோவில் தினந்தோறும் காலை 6 மணிமுதல் இரவு 8,30 மணி வரை திறந்து இருக்கும். இங்கு காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தசாமம் என 4 கால பூஜைகள் நடைபெறுகிறது. தீராத நோய்கள் தீர்க்கும் கொளஞ்சியப்பர் கோவில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.
தீராத நோய்கள் உள்ளவர்கள் இக்கோவிலில் தங்கி ஒரு மண்டலம் கொளஞ்சியப்பருக்கு பூஜை செய்து வந்தால் நோய் தீர்ந்து விடும் என்பது ஐதீகம். அதன்படி இத்திருத்தலத்தில் தீராத நோய் உள்ளவர்கள் ஒரு மண்டலம் 1.2 மண்டலம் என தங்கி கொளஞ்சியப்பரை தினமும் பூஜை செய்து வேப்ப எண்ணையினை உடம்பில் பூசியும், அருந்தியும் வருவார்கள்.
இதில் அனைத்து நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். மேலும் கை, கால், கழுத்து வலி ஏற்பட்டவர்கள் கொளஞ்சியப்பரை வழிபாடு செய்து வேப்ப எண்ணை எடுத்து மருந்தாக உடலில் பூசி கொள்ளும் வழக்கமும் பக்தர்கள் இடையே உண்டு.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்

» திருவேங்கடமுடையான் கோவில்
» விக்கிரபாண்டீசுவரர் கோவில்
» சுத்தரெத்தினேஸ்வரர் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum