சுத்தரெத்தினேஸ்வரர் கோவில்
Page 1 of 1
சுத்தரெத்தினேஸ்வரர் கோவில்
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் என்ற ஊரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஊட்டத்தூர். இங்கு பழங்கால வரலாற்று சிறப்புமிக்க சுத்தரெத்தினேஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவ மூர்த்தி சக்திமிக்க தெய்வங்களில் ஒன்றாக கருதப்படுகிறார். இவர் ஆதிசிவனின் அற்புத அம்சம் ஆவார்.
கால பைரவர்............ கலியுகத்தில் கால பைரவ மூர்த்தி வழிபாடு, மிகவும் முக்கிய இடம்பெற காரணமே, மானிட உலகமானது தன் ஆயுட்காலத்தை முறையாக பயன்படுத்தாமையே ஆகும். சோம்பேறித்தனம், பயனற்ற கேளிக்கைகள், முறையற்ற காமம், பாவ செயல்கள், வீணாக பொழுது போக்குதல், அரட்டை போன்றவற்றில் லயித்திருப்பதால், பயனுள்ள இம்மானுட பிறவியில் இறைவனை நோக்கி காலத்தை பயன்படுத்துவோர் மிக, மிக அரிது.
இரவு நேர பயணம்........... அனைத்து மனிதர்களுமே தூக்கத்துடன் தூக்கமாக பயணத்தை கழித்து விடுவோம் என்று இரவிலேயே அனைத்து வித பயணங்களையும் மேற்கொள்கின்றனர். இதனால் தீவினை சக்தி நிறைந்த இரவு நேரத்தில் தன்னுடைய பயண சக்திகளை கழித்து பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இரவு நேர பயணங்களை தவிர்க்க இயலாவிட்டால் கால பைரவரை வணங்கி பயணம் தொடங்கப்பட வேண்டும். தினந்தோறும் இரவில் கால பைரவ மூர்த்தியை வணங்கி விழிப்புணர்வுடன் கூடிய இப்பகல் பொழுதை நல்ல முறையில் கழிக்காமைக்கு பிராயச்சித்தம் வேண்டியும், விழிப்பற்ற உறக்க நிலையில் கழியும் இரவுப்பொழுது நல்ல முறையில் சீராக செல்லவும் வேண்டி துதிக்க வேண்டும்.
பைரவர் வழிபாடு......... தூக்கம் வருகின்றது என்று உடனே தூங்கி விடக்கூடாது. அல்லது தூக்கம் வரும் வரை நாவல்களை படித்து, டி.வி.யை பார்த்து பொழுதை கழிக்காது கால பைரவ துதிகளுடன் ராத்திரி ஸக்த வழிபாட்டுடன் உறக்க தேவதையை வரவேற்க வேண்டும்.
மரணத்தின் ஒத்திகையே உறக்கம் என்று சித்தர் வாசகம் உரைப்பதால் உறக்கத்தில் உள்ள தெய்வீக ரகசியங்களை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும். இதற்கு காலபைரவ மூர்த்தி வழிபாடு மிகவும் இன்றியமையாதது. திருச்சி அருகே உள்ள ஊட்டத்தூரில் அருள்பாலிக்கும் பைரவ மூர்த்தி, கால பைரவ மூர்த்தி அம்சங்கள் கொண்டவர்.
11 வாரங்கள் முறைப்படி சகஸ்ரநாம வழிபாடு செய்தால் சிறு குழந்தைகளின் மனபயம் நீங்குவதாகவும், மாடுகளுக்கு வியாதி நீங்குவதாகவும் ஐதீகம். ஒவ்வொரு மனிதனும் இரவில் பலவித குற்றங்கள், பாவ செயல்களை புரிவதால் இரவை தெய்வீகமாக கழிப்பது மட் டுமின்றி இரவில் செய்யக்கூடாத செயல்களை செய்து பாவ வினைகளை கூட்டிக் கொண்டதற்கான பிராயச்சித்தம் பெற உதவுவதே ஊட்டத்தூர் பைரவர் வழிபாடாகும்.
ராகுகாலம், எமகண்டம், குளிகை போல காலன் என்ற ஒரு நேர பகுப்பும் உண்டு. ராகு காலம் போல குறித்த ஒன்றரை மணி நேரத்திற்கு இக்காலன் நேரம் அமைகிறது. மரண பயம் தீரவும், மிருத்யுஞ்ஜெய மூர்த்தியின் அருளை பெறவும் இக்காலன் நேரத்தில் ஊட்டத்தூர் பைரவரை வழிபடுதல் மிகவும் சிறப்பானதாகும்.
அஷ்டமி திதியில் வழிபாடு....... மரணத்திற்கு அஞ்சி வாழ்வோர், கடுமையான நோய்க்கு ஆட்பட்டோர், இருதய நோயால் அவதியுறுவோர் காலன் நேரத்தில் ஊட்டத்தூர் ஸ்ரீ பைரவருக்கு சந்தன காப்பிட்டு அதில் மாதுளை முத்துக்களை பதித்து ஸ்ரீகாலாஷ் டகத்தை ஓதியும், கால பைரவருக்குப் பிரீதியான முழு முயற்சியால் அர்ச்சித்தும், முழு முந்திரி கலந்த உணவை தானம் அளித்தும் மேற்கண்ட குறைகளுக்கு தக்க நிவர்த்தி பெறலாம்.
பொதுவாக அடிக்கடி இரவு நேர பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள், இரவு நேரத்தில் அலுவலக பணி புரிபவர்கள் ஊட்டத்தூர் ஸ்ரீபைரவரை அடிக்கடி தரிசித்து வர வேண்டும். ஏனென்றால் இரவில் தீய சக்திகள் பெருக்கெடுப்பதாலும் அவற்றில் இருந்து தம்மை தற்காத்துக் கொள்ளும் புண்ய சக்தியை பெற்றிருப்போர் ஒரு சிலரே என்பதாலும் ஸ்ரீகால பைரவருக்கு உரித்தான அஷ்டமி திதியில் ஊட்டத்தூர் ஸ்ரீபைரவருக்கு ஆராதனை செய்து வழிபடுதலால் இரவு நேரத்தில் ஏற்படும் கஷ்டங்கள், விபத்துகளில் இருந்து தம்மை தற்காத்து கொள்ளலாம்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்

» ஜம்புலிங்கேஸ்வரர் கோவில்
» விருத்தபுரீஸ்வரர் கோவில்
» கோவில் .........

Permissions in this forum:
You cannot reply to topics in this forum