விக்கிரபாண்டீசுவரர் கோவில்
Page 1 of 1
விக்கிரபாண்டீசுவரர் கோவில்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோழபுரம் கிராமத்தில் விக்கிரபாண்டீசுவரர் கோவில் உள்ளது. இங்கு லிங்க வடிவில் அருள்பாலிக்கும் சிவன் நாகாபரணத்தை குடையாக தாங்கியுள்ளார். சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது இந்த கோவில்.
தல வரலாறு::
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களின் கட்டுப்பாட்டில் இந்த ஊர் இருந்ததாக கூறுகிறார்கள். இந்த நிலையில் பாண்டிய மன்னருக்கும், சோழ மன்னனுக்கும் இடையே ஏற்பட்ட போரில், சோழ மன்னனின் கண் பார்வை பாதிக்கப்பட்டது. சிறந்த சிவ பக்தனான சோழ மன்னன், இறைவனை மனமுருக வேண்டி தனக்கு கண்பார்வை தந்து அருளும்படி வேண்டினான்.
இறைவனும் சோழமன்னனின் இறை பக்தியை கண்டு மெச்சி அவனுக்கு கண்பார்வை கொடுத்து அருளினார். கண்பார்வை பெற்ற சோழ மன்னன் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கோவில் கட்ட முடிவு செய்தான். அதன் தொடர்ச்சியாக ஒரு கோவிலை பெரிய அளவில் புதுப்பித்து கட்டினான்.
அதுதான் சோழபுரம் விக்கிரபாண்டீசுவரர் கோவில். ஆரம்பத்தில், இந்த கோவில் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகும். அதனால் இங்குள்ள இறைவன் `விக்கிர பாண்டீசுவர்' என அழைக்கப்படுகிறார்.
அதன் பிறகே சோழ மன்னர்களின் ஆளுகைக்கு இப்பகுதி உட்பட்டது என்றும் சொல்கிறார்கள். சோழபுரம் பகுதியில் வெளிநாட்டு நாணயங்கள் தவிர தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் நாணயங்களும் புதையலாக கிடைத்துள்ளன.
முதலாம் ராஜராஜனின் செப்புக் காசுகள் சோழபுரம் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்துள்ளன. மேலும் பாண்டிய, நாயக்க மன்னர்களின் கால நாணயங்களும் கிடைத்துள்ளன. இந்த கோவிலில் கால பைரவர், விநாயகர், சண்டிகேசுவரர், பிள்ளை சித்தர், நடராஜர் போன்ற தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன.
திருவண்ணாமலை சிவன் கோவிலில் உள்ள லிங்கத்தின் மத்தியில் காணப்படும் அம்புகுறி இங்குள்ள சிவலிங்கத்தின் நடுவிலும் இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. இங்கு இறைவனுடன் வீற்றிருக்கும் அம்மன் குழல்வாய் மொழி அம்மன் என்று அழைக்கப்படுகிறார்.
குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவற்றை இந்த அம்மன் அருளுகிறார்.
போக்குவரத்து வசதி:
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து விருதுநகர் சென்று பின் அங்கிருந்து ராஜபாளையத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் சோழபுரம் அமைந்துள்ளது. இங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் சென்றால் விக்கிரபாண்டீசுவரர் கோவிலை சென்றடையலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்

» சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோவில்
» விக்கிரபாண்டீசுவரர் கோவில்
» திருவேங்கடமுடையான் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum