நல்ல கதை தான் பெயர் பெற்று தரும்; படத்தின் பட்ஜெட் அல்ல: அழகி மோனிகா பேட்டி!
Page 1 of 1

குழந்தை நட்சத்திரமாய், 1990ல், “அவசர போலீஸ் 100ல் அறிமுகமாகி, என் ஆசை மச்சானில், “கருப்பு நிலா… நீ தான் கலங்குவதேன்… என, மினி “கேப்டனுக்கு, மினி காதலியாய் களமிறங்கி, தமிழக அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது பெற்றவர். தமிழ், மலையாளத்தில் தொடர்ந்து தவழ்ந்த இக்குழந்தை, 2001ல், “தீர்த்ததானம் என்ற மலையாள படத்தில், நாயகியாய் அவதாரம் எடுத்தது.
காதல் நினைவுகளை திரும்பி பார்க்க வைத்த “அழகி படத்தில், தமிழின் தனக்கான முத்திரையை அழுத்தமாய் பதிய வைத்தவர். பகவதி, பந்தாபரமசிவம், தாஸ், சண்டைக்கோழி, இம்சை அரசன் 23ம் புலிகேசி, சிலந்தி என, ஒவ்வொரு படத்திலும், பல்வேறு பரிமாணங்கள் கண்டவர். ஒளியிலே தெரிந்த அந்த தேவதைக்கு பெயர், மோனிகா. 2013ல் பல்வேறு படங்களில் இடம் பெற்று “பிஸி ஆன அவர், ராமநாதபுரம் வந்த போது, உங்களுக்காய் நாம் விரித்த கேள்வி வலையில் சிக்கினார். இதோ அந்த அழகிய மீன், பேசத் தொடங்குகிறது.
* நடிகை மோனிகாவுக்கு, குழந்தை நட்சத்திரம் அனுபவம் கை கொடுத்ததா?
குழந்தை மோனிகா தான், சினிமா தொழிலை கற்றாள். அவள் கண்ட அனுபவம், சபை கூச்சத்தை நீக்கியது. “ஆக்ஷன் என்றதும், நடிப்பு தானாய் வந்து விடும்.
* சிறுவயதில் “நடிப்பு கற்பது எளிமையா?
நடிப்பும், பள்ளி பாடம் போன்றது தான். அடுத்தடுத்த படிகளை கடந்த போது, அனுபவம் தானாக அதிகரித்தது. இருப்பினும், ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும், புதிய அனுபவத்தை பெறுகிறேன்.
* சிறந்த நடிகை ஆக என்ன செய்ய வேண்டும்?
அது நம்மை இயக்கும் டைரக்டர் கையில் உள்ளது. அவர் தான், சிறந்த நடிகர், நடிகையை உருவாக்கும் பிரம்மா.
* அனுபவம் இருந்தும், “மினி பட்ஜெட் படத்தில் தான் வாய்ப்பு கிடைக்கிறதா?
கோடிகளை கொட்டி எடுக்கும் படத்தில் நடிப்பது பெரிதல்ல; கதை நன்றாக இருக்க வேண்டும், அவ்வளவு தான். சிறந்த கதை தான், பெயர் பெற்றுத்தரும் என்பதால், பட்ஜெட்டை பார்ப்பதில்லை.
* அழகை மெருகேற்ற மூக்கு அறுவை சிகிச்சை செய்ததாக ஒரு “கிசுகிசு இருக்கே?
அப்படியா…? இல்லையே..! இது இயற்கையான அழகு தாங்க…, என, விடை பெற்றவரிடம், “லோ பட்ஜெட் படத்தில், நமக்கு கதாநாயகன் வேடம் கிடைத்தால், நடிப்பீர்களா என, கலாய்க்க முயன்ற போது, “ச்சி… உங்க கூட மாட்டேன்… உங்க போட்டோ கிராபருடன் வேண்டுமென்றால் நடிப்பேன், என, பதிலுக்கு அவர் கலாய்த்து விட்டார். அழகானவர்களிடம் “அடி வாங்குவது கூட அழகு தானே!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நான் ஒன்றும் தனிநபர் அல்ல - அரசாங்கத்தின் அங்கம் தான் : சி.பி.ஐ. இயக்குனர் பேட்டி
» ஐ படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடிக்கும் குறைவுதான்! – ஷங்கர்
» ஐ படத்தின் பட்ஜெட் 100 கோடிக்கும் குறைவுதான்: இயக்குனர் சங்கர்
» நடிகைகளை கவர்ச்சியாக காட்டவே டைரக்டர்கள் விரும்புகிறார்கள்: நடிகை மோனிகா பேட்டி
» ஷங்கர் படத்தின் பெயர் மாறுகிறது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum