நான் ஒன்றும் தனிநபர் அல்ல - அரசாங்கத்தின் அங்கம் தான் : சி.பி.ஐ. இயக்குனர் பேட்டி
Page 1 of 1

நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ.யின் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு முன்னதாக மத்திய சட்ட மந்திரி அஸ்வினி குமாரிடம் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா பகிர்ந்துக் கொண்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணை நடைபெற்ற போது கருத்து கூறிய நீதிபதிகள், 'தன்னாட்சி அதிகாரத்துடன் சுதந்திரமாக இயங்க வேண்டிய சி.பி.ஐ., தனது விசாரணை அறிக்கையை சட்ட மந்திரியுடன் ஏன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்?' என்று கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா, 'விசாரணை அறிக்கையை நான் வெளிநபர்கள் யாரிடமும் காட்டவில்லை. இந்த நாட்டின் சட்ட மந்திரியிடம் தானே காட்டினேன்?' என்று கூறியுள்ளார்.
பேட்டியின் போது அவர் மேலும் கூறியதாவது:-
சி.பி.ஐ. என்பது தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு அல்ல. நானும் தன்னாட்சி அதிகாரம் பெற்றவன் அல்ல. நானும் அரசாங்கத்தின் ஓர் அங்கம் தான். அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டவன்.
சட்ட அமைச்சரை சந்திப்பதற்கு முன்னர் இருந்த விசாரணை அறிக்கையையும், அவரது திருத்தத்திற்கு பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளோம். யாருடைய அறிவுறுத்தலின் பேரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற குறிப்பும் அறிக்கையில் உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் கேள்விகளுக்கும், விமர்சனத்திற்கும் பதில் அளித்து விரைவில் உரிய விளக்கத்தை தாக்கல் செய்வேன். இந்த விவகாரத்தில் எங்களது பதிலைப் பெற்ற பின்னர் சுப்ரீம் கோர்ட் நியாயமான முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நல்ல கதை தான் பெயர் பெற்று தரும்; படத்தின் பட்ஜெட் அல்ல: அழகி மோனிகா பேட்டி!
» சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது நான் தான் : 'பவர் ஸ்டார்' தில் பேட்டி
» அஜீத், விஜயை நிராகரிக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை: கௌதம் மேனன்
» நான் ஏன் இந்து அல்ல
» நான் மகான் அல்ல – திரை விமர்சனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum