தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகைகளை கவர்ச்சியாக காட்டவே டைரக்டர்கள் விரும்புகிறார்கள்: நடிகை மோனிகா பேட்டி

Go down

நடிகைகளை கவர்ச்சியாக காட்டவே டைரக்டர்கள் விரும்புகிறார்கள்: நடிகை மோனிகா பேட்டி Empty நடிகைகளை கவர்ச்சியாக காட்டவே டைரக்டர்கள் விரும்புகிறார்கள்: நடிகை மோனிகா பேட்டி

Post  ishwarya Sat Mar 16, 2013 12:04 pm

ஈரோடு ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. விழாவில் நடிகை மோனிகா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது தமிழில் 2 படத்திலும், மலையாளத்தில் 2 படத்திலும் நடித்து வருகிறேன். தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதை ஏற்க முடியாது. ஏற்கனவே தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான நடிகைகள் தமிழ் படத்தில் நடித்து உள்ளனர்.

தமிழ் படங்களில் அதிகமான கவர்ச்சி உள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால் தெலுங்கு படத்தை பார்க்கும் போது கவர்ச்சி இல்லாத படங்களே இல்லை. அங்கு கதாநாயகிகள் கூட அதிக கிளாமராகவே நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு கவர்ச்சி இல்லை.

நடிகை மனோரமா, கோவை சரளாவுக்கு பிறகு நகைச்சுவை நடிகைகள் என்று சொல்லும் அளவுக்கு யாரும் இல்லை. நகைச்சுவை நடிப்பில் நடிகர்களின் கையே ஓங்கி இருக்கிறது. இதற்கு காரணம் சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் பெரும்பாலும் கதாநாயகிகளாக நடிக்கவே விரும்புகிறார்கள்.

மேலும் டைரக்டர்களும் பெரும்பாலும் நடிகைகளை கிளாமராக நடிக்க வைக்கதான் விரும்புகிறார்கள். எனவே நகைச்சுவை நடிகைகளை உருவாக்குவது டைரக்டர்களின் கையில் தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நல்ல கதை தான் பெயர் பெற்று தரும்; படத்தின் பட்ஜெட் அல்ல: அழகி மோனிகா பேட்டி!
» நடிகை கத்ரினா கைப்பை அடித்த சல்மான்கான்: கவர்ச்சியாக ஆடை உடுத்தியதால் ஆத்திரம்
» முன்னாள் முதல்வர்தான் என் கணவர் – நடிகை பேட்டி
» நடிகை ஆவதற்காக பட்டினி கிடந்தேன்: நந்திதா பேட்டி
» இதுவரை நான் சொல்லாதது: நடிகை த்ரிஷா சிறப்பு பேட்டி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum