வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்: ராமதாஸ்
Page 1 of 1

ஊட்டி, மார்ச்.27-
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி, தென் பாண்டி சீமை தலைவர் அரசக்குமார், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, கொ.மு.க. மாநில பொதுசெயலாளர் ஜி.கே.நாகராஜ், கொங்கு இளைஞர் பேரவை குமார் ரவிகுமார், படுகர் அமைப்பின் சார்பில் பேராசிரியர் குள்ளன், முதலியார்பிள்ளை அமைப்பு சார்பில் கே.என்.ராஜன், தெலுங்கு செட்டியார் அமைப்பு சார்பில் ராஜ்குமார், தோடர் இன மக்கள் சார்பில் சத்யராஜ், ஆல்வாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண்கள் மற்றும் ஆண்கள் 14 வயது முதல் 19 வயது வரை ஹார்மோன் கோளாறு காரணமாக எளிதாக காதல் வலையில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனை பயன்படுத்தி பல மாவட்டங்களில் பெண்களை திருமணம் செய்து பின்னர் கட்டப்பஞ்சாயத்து நடத்தப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் பெற்றோர்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.
இந்த நிகழ்வுகளில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகின்றது. இதனால் அப்பாவி பெற்றோர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க வன்கொடுமை தடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், காதல் நாடக திருமணங்களால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் நிலைகுறித்தும் அறிய தனி நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அடுத்த மாதம் (ஏப்ரல்) மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும் மே மாதம் முதல் வாரத்தில் டெல்லியில் மிகப்பெரிய போராட்டமும் நடத்தப்படும்.
இந்த இயக்கம் முழுக்க, முழுக்க அரசியல் சார்பற்றது. எஸ்.சி. மக்களை எதிர்த்து நடக்கும் இயக்கம் இது அல்ல. அரசியல் சட்டத்தில் எஸ்.சி. மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை பயன்படுத்தி பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும். எஸ்.சி. இயக்கத்தை நடத்தும் தலைவர்கள் சுவாமி விவேகானந்தரை போல் தங்களது இன இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
ஆனால் ஒரு சில தலைவர்கள் நல்லிணக்கம் பாதிக்கப்படும் வகையில் இளைஞர்களை தவறாக வழி நடத்துகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகள், பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும், பெண்கள் காதல் திருமணம் செய்தாலும், பெற்றோர்களின் சம்மதத்தை பெற வேண்டும், இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கூறி உள்ளனர்.
எனவே ஆண்களுக்கு திருமண வயதாக 23-ம், பெண்களுக்கு திருமண வயதாக 21-ம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிபதியின் ஒப்புதல் பெற்றே வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்யக்கூடாது.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எஸ்.பி.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு.. விரைவில் கைதாகிறார்!
» மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
» டாக்டர் ராமதாஸ் கைது: அறவழியில் பா.ம.க. போராட்டம் தொடரும்-அன்புமணி ராமதாஸ் அறிக்கை
» விஸ்வரூபம் திரைப்பட விசிடி விற்றால் குண்டர் சட்டத்தில் கைது
» வெளிநாட்டிலிருக்கும் தமது தங்கத்தை கொண்டுவர ஜெர்மன் முயற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum