விஸ்வரூபம் திரைப்பட விசிடி விற்றால் குண்டர் சட்டத்தில் கைது
Page 1 of 1

தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படத்தை திருட்டு விசிடியில் விற்போர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இரண்டு வார காலம் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இத் திரைப்படம் அண்டை மாநிலங்களில் திரையிடப்பட்டுள்ளது. இதனால் இங்கிருந்து கமல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், அண்டை மாநிலங்களுக்கு கார்களில் சென்று படம் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து திருட்டு விசிடி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலமாக தமிழகத்துக்குள் விஸ்வரூபம் திரைப்படம் பொதுமக்களிடத்தில் பரவி விடக்கூடாது என்பதில் போலீஸôர் தீவிரமாக உள்ளனர்.
அதன்படி, தமிழக குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பிரதீப் வி.பிலிப் உத்தரவின் பேரில், டிஐஜி ஜான் நிக்கல்சன் மேற்பார்வையில், எஸ்.பி.விஜயகுமாரி தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகையா அடங்கிய திருட்டு விடியோ தடுப்புப் பிரிவினர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த மூன்று தினங்களாக கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் உள்ள கணினி மையங்கள், பேருந்து நிலையங்கள், பயணிகள் தங்கும் விடுதிகள், ஆம்னி பேருந்துகள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. யாரேனும் இது தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவர் என்று திருட்டு விடியோ தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முதல்வருடன் ரஜினி-கமல் ஆலோசனை: திருட்டு வி.சி.டி வைத்திருந்தால் குண்டர் சட்டம்!
» கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் 'விஸ்வரூபம்'!
» விஸ்வரூபம் திரைப்பட பிரச்னையால் கமலை விட்டு நழுவிய பத்ம விருது
» விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை: பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண கருணாநிதி வேண்டுகோள்
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந

Permissions in this forum:
You cannot reply to topics in this forum