தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகாலட்சுமி பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள்

Go down

மகாலட்சுமி பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள் Empty மகாலட்சுமி பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள்

Post  gandhimathi Sat Jan 19, 2013 12:55 pm


முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றியிருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று பொன்- பொருள்-ஆடைகள் சேர்த்திருந்தாலும் அவர்கள் இப்பிறவியில்/மறுபிறவிகளில் பாடுபட்டு சேர்த்த பணம், பொருட்கள், பூர்வீக சொத்துக்களை பலவழிகளிலும் இழந்து வறுமையில் தவிக்க வேண்டியிருக்கும்.

இத்தகைய பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும். மகாலட்சுமி பூஜையின்போது நாம் முற் பிறவிகளில் செய்துள்ள தவறான செயல்களை மன்னிக்கும்படி- மனப்பூர்வமாக வேண்டினால் அந்தத் தாய் நம்மை மன்னித்து நமது வறுமையை போக்கி அருள்புரிவாள். பெண்களின் மாங்கல்ய தோசத்திற்கும் ஸ்ரீமகாலட்சுமி பூஜை சக்திவாய்ந்த பரிகாரம் ஆகும்.

எப்படி மகாலட்சுமி பூஜை செய்வது?

வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி படத்தை அலங்கரிக்கவும். காலையில் ஸ்ரீமகாலட்சுமி படத்தை 12 அல்லது அதன் மடங்கு களில் வலம் வரவும். பால், பழம் அல்லது பாயாசம் நைவேத்தியம் செய்யவும். நெய் தீபம் ஏற்றவும். மகாலட்சுமி அஷ்டகம் அல்லது மகாலட்சுமி துதியை 3 முறை பாடவும்.

நைவேத்தியத்தை பெண் குழந்தைகளுக்கு (பிரசாதமாக) பகிர்ந்து கொடுக்கவும். இதையே ஆடி மாதம் செய்தால் அதன் பெயர்தான் வரலட்சுமி விரதம். ஆடி மாதம் செய்யும்போது வயதான சுமங்கலிகளை வர வழைத்து அவர்களை வணங்கி ஆசி பெறுவது நன்று.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum