காரைக்கால் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம் முதல்–அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
Page 1 of 1

காவிரி நீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்போது நடந்த விவாதத்தின்போது முதல்–அமைச்சர் ரங்கசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டார். அந்த விவாதம் வருமாறு:–
காரைக்கால் விவசாயிகள்
அன்பழகன்: தமிழக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15ஆயிரம் அறிவித்துள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்துள்ளது. இந்த அரசு காரைக்கால் விவசாயிகளுக்கு என்ன செய்யப்போகிறது? முதல்–அமைச்சர் நிதியில்லை, அதிகாரம் இல்லை என்றும், மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டி மாநாடு போட்டு பேசுகிறார். அதை இந்த சட்டமன்றத்தில் பேசவேண்டும். முதல்–அமைச்சரின் நிவாரண நிதி இஷ்டத்துக்கு வழங்கப்படுகிறது. நெட்டப்பாக்கம் தொகுதியில் போலீஸ்காரர் ஒருவர் கொலை செய்துள்ளார். அந்த குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கவில்லை. எந்தெந்த தொகுதியில் யார்யாருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது என்பதை இங்கு தெரிவிக்க தயாரா?
வி.எம்.சி.சிவக்குமார்: காரைக்காலுக்கு பக்கத்தில் உள்ள நாகை மாவட்டம் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கும் ஏதாவது உதவி செய்யவேண்டும்.
கண்காணிப்பு ஆணையம்
அன்பழகன்: காவிரி பிரச்சினையில் 90சதவீதம் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா முடிவு கண்டுள்ளார். காவிரி கண்காணிப்பு ஆணையம் அமைக்க அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் புதுவை அரசும் சேரவேண்டாமா? இல்லையா?
பி.ஆர்.சிவா: காரைக்காலில் காவிரி நீர் கிடைக்காதது குறித்து குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அறிக்கையும் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு நிவாரணத்தை அறிவிக்கவேண்டும்.
ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம்
முதல்–அமைச்சர் ரங்கசாமி: காரைக்கால் விவசாயிகள் சம்பந்தமாக எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். நமக்கு உரிய காவிரி நீர் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வேளாண்துறை கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. அங்கு 4ஆயிரத்து 749ஹெக்டேர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் வீதம் அடுத்த மாதம் வழங்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
அதைத்தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ.க்கள் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரியையும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் மழையளவு குறைந்த நிலையிலும் விளைச்சல் அடிப்படையில் புதுச்சேரி பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வாய்ப்பில்லை என்று முதல்–அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
ரூ.9½கோடி நிவாரண உதவி
முதல்–அமைச்சர் ரங்கசாமியின் அறிவிப்புப்படி விவசாயிகளுக்கு நிவாரண உதவியாக ரூ.9கோடியே 49லட்சத்து 80ஆயிரம் வழங்கப்பட உள்ளது என்று முதல்–அமைச்சர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முதல்-அமைச்சர் நடவடிக்கை எதிரொலி: விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு-திருமாவளவன் அறிவிப்பு
» விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு
» தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 7 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்படும் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
» அரியலூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு ருசியான தானிய லட்டு, அல்வா சட்டசபையில் அமைச்சர் பி.வளர்மதி அறிவிப்பு
» கத்தரிக்காய் சாகுபடியில் ஹெக்டேருக்கு 70 டன் மகசூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum