தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அரியலூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு ருசியான தானிய லட்டு, அல்வா சட்டசபையில் அமைச்சர் பி.வளர்மதி அறிவிப்பு

Go down

 அரியலூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு ருசியான தானிய லட்டு, அல்வா சட்டசபையில் அமைச்சர் பி.வளர்மதி அறிவிப்பு  Empty அரியலூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு ருசியான தானிய லட்டு, அல்வா சட்டசபையில் அமைச்சர் பி.வளர்மதி அறிவிப்பு

Post  amma Thu Apr 04, 2013 6:20 pm



ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகம் உள்ள அரியலூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு ருசியான தானிய லட்டு, அல்வா வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பி.வளர்மதி அறிவித்தார்.

மானியக்கோரிக்கை மீது விவாதம்

சட்டசபையில் நேற்று சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் உறுப்பினர்கள் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் (தே.மு.தி.க.), கே.அழகுவேலு (அ.தி.மு.க.), ஜெ.புஷ்பலீலா ஆல்பன் (தி.மு.க.), டில்லி பாபு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ), ஏ.கே.அரங்கநாதன் (அ.தி.மு.க.), கே.உலகநாதன் (இந்திய கம்யூனிஸ்டு), விஜயதரணி (காங்கிரஸ்) ஆகியோர் பேசினார்கள்.இந்த விவாதத்திற்கு சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் பி.வளர்மதி பதில் அளித்துப் பேசினார். சமூக நலத்துறை, சத்துணவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களையும், அவற்றின் பயன்பாடுகளையும் அவர் விளக்கினார். பின்னர் அமைச்சர் வளர்மதி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:–

சுகாதார பைகள்

* ரூ.1 கோடியே 38 லட்சம் செலவில் பெரம்பலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புதிதாக 2 சேவை இல்லங்கள் தொடங்கப்படும்.

* தமிழகம் முழுவதும் உள்ள 54,439 அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு ரூ.2 கோடியே 72 லட்சம் செலவில் சுகாதார பைகள் (ஹைஜீன் கிட்) வழங்கப்படும்.

* 10,000 அங்கன்வாடி மையங்களில் முன்பருவக்கல்விகென ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் வகுப்பறை உட்புற சுவர்களில் விளக்கப்படத்துடன் நீதிக்கதைகள் அச்சிடப்படும்.

எடை பார்க்கும் கருவி

* சென்னை தாம்பரம் சேவை இல்லத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவிகளுக்கு ரூ.1 கோடி செலவில் பன்னடக்கு படுக்கை அறை (டார்மிட்டரி) கட்டப்படும்.

* குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசார விளம்பர படங்கள் தயாரித்து 60 முகூர்த்த நாட்களில் அதற்கு முந்தைய தினத்தில் இருந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும்.

* அங்கன்வாடி குழந்தைகளின் எடையை கண்காணிக்க 2 ஆயிரம் எடை பார்க்கும் கருவிகள் வழங்கப்படும்.

சுவையான தானிய லட்டு, அல்வா

* ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகம் உள்ள அரியலூர் மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக 5 மாதங்களுக்கு, தொடக்கப்பள்ளி குழந்தைகள் விரும்பும் வண்ணம் தினமும் 50 கிராம் அளவில் சுவையான தானிய லட்டு, அல்வா, காரம் வழங்கப்படும்.

* பெரம்பலூர் மாவட்டத்தில் 370 சத்துணவு மையங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரூ.3 கோடியே 71 லட்சம் செலவில் தினமும் கூடுதலாக 500 கலோரி ஊட்டச்சத்து அளிக்கப்படும்.

* வன்முறை மற்றும் பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை காக்க மத்திய அரசு உதவியுடன் மாநில அளவில் பெண்கள் வள மையம் தொடங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் அருங்காட்சியகம்

* செவித்திறன் குறைவுடையோர் பயன்பெறும் வகையில் 10 மாவட்டங்களில் ஏறத்தாழ ரூ.2 கோடி செலவில் ஆரம்பநிலை மண்டல பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

* சென்னையில் ரூ.1 கோடி செலவில் மாற்றுத்திறனாளிகள் குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

* ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் படிக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இணை உணவு, மதிய உணவு வழங்கப்படும்.

மானியம் அதிகரிப்பு

* சிறு மற்றும் குறுந்தொழில், சுயவேலைவாய்ப்பு வங்கிக் கடன் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மானியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி கொடுக்கப்படும்.மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் வளர்மதி வெளியிட்டார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
»  தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 7 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்படும் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
»  டெசோ மாநாடு குறித்து அமைச்சர் விமர்சனம்: சட்டசபையில் தி.மு.க. வெளிநடப்பு
» விலங்குகளிடம் இருந்து மனிதர்களை காப்பதற்கு 183 கிலோ மீட்டருக்கு சூரிய மின்வேலி சட்டசபையில் அமைச்சர் தகவல்
» தமிழக அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
» காரைக்கால் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம் முதல்–அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum