விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு
Page 1 of 1

பருவ மழை தவறியதாலும், உரிய நேரத்தில் நீரை திறந்து விட
கர்நாடக அரசு மறுத்ததாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு
நிவாரணம் வழங்குமென்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையைத் தவிர மற்ற 31 மாவட்டங்களையும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தொடர்புடைய விடயங்கள்
குறுவை, சம்பா ஆகிய இரு பருவங்களும்
டெல்டா பகுதியில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் 50
சதவீதத்துக்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்ட இடங்களில் உள்ள ஒன்றே முக்கால்
லட்சம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு
அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிர் கருகியைதைக் காணச் சகிக்காமலும், கடன் சுமை
குறித்த கவலைகளாலும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களின்
குடும்பத்தினருக்கும் அரசு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கும் என்று முதல்வர்
அறிவித்துள்ளார்.
'கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட கடனைத்
திருப்பிச் செலுத்த விவசாயிகளுக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்படும், நிலவரி
தள்ளுபடி செய்யப்படும், விவசாயம் இல்லாத நிலையில் மற்ற திட்டங்களை
முன்னெடுத்து வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அரசு முயலும்' என்று தமிழக
முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
ஆனால் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க
வேண்டும் என்றும் பயிர்க் கடனை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்றும்
விவசாயிகள் கோருகின்றனர். அதேபோல நிலமற்ற கூலித் தொழிலாளர்கள் தொடர்பிலும்
அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழக சட்டசபையில் விஜயகாந்த்
தலைமையிலான தேமுதிக கட்சி எம் எல் ஏக்களும் அந்தக் கட்சியில் இருந்து
பிரிந்து இயங்கும் நான்கு எம் எல் ஏக்களுக்கும் இடையே கை கலப்பு
நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தமிழக அரசு (ஏ டூ இசட்) பாகம்–1, 2
» தமிழக அரசு தோட்டக்கலைத்துறை வழங்கும் மானியங்கள்
» காரைக்கால் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம் முதல்–அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum