புஞ்சைபுளியம்பட்டி அருகே
Page 1 of 1
புஞ்சைபுளியம்பட்டி அருகே
புஞ்சைபுளியம்பட்டி அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் 400 வாழைகளை நாசம் செய்தன.
தொடரும் அட்டகாசம்...
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி தோட்டப்பயிர்களை நாசம் செய்வது தினமும் நடக்கும் தொடர்கதையாக உள்ளது.
நள்ளிரவு நேரங்களிலும், அதிகாலையிலும் யானைகள் வன ஊழியர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பி வனப்பகுதியை விட்டு வெளியே வந்துவிடுகின்றன. அகழி அமைக்கப்பட்டு இருக்கும் இடங்களில் அதிக ஆழம் இல்லாமல், பாறைகள் உள்ள இடங்களில் கால்வைத்து கடந்துவிடுகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் கிராமமக்களுடன் விடிய விடிய தூங்காமல் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வாழைகள் நாசம்
இந்தநிலையில், அதிகாலை 4 மணியளவில் விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து 3 யானைகள் வெளியேறி விண்ணப்பள்ளி கிராமத்துக்குள் புகுந்தது.
அங்கு பொன்னுசாமி என்பவருடைய தோட்டத்தில் நுழைந்து, வளர்ந்த நிலையில் இருந்த கதலி வாழைகளை தின்றும், மிதித்தும் நாசம் செய்தன. இதில் 400–க்கும் மேற்பட்ட வாழைகள் நாசம் அடைந்தன.
தென்னங்கன்றுகள் சேதம்
அதன்பின்னர் அருகே உள்ள கோயமுத்தூர்காரர் என்பவருடைய தோட்டத்திலும் புகுந்து 10 தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியது.
இதுபற்றி தோட்டத்து உரிமையாளர்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் வருவதற்குள் யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.
யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புஞ்சைபுளியம்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வாடிப்பட்டி அருகே திருமணமான
» மல்லசமுத்திரம் அருகே கோவில் பிரச்சினை
» அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில்
» ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: 3 பேர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum