அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில்
Page 1 of 1
அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில்
அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 7 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
துப்பாக்கி சத்தம்
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக தட்டக்கரை அதிரடிப்படை வீரர்களுக்கும், பர்கூர் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்தது.
உடனே அதிரடிப்படையினரும், வனத்துறை அதிகாரிகளும் 2 குழுக்களாக பிரிந்து பர்கூர் வனப்பகுதியில் தாமரைகரையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள். அப்போது தூக்குக்காடு என்ற இடத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. உடனே வனத்துறை மற்றும் அதிரடிப்படை வீரர்கள் சத்தம் வந்த இடத்துக்கு விரைந்தார்கள்.
மான் வேட்டை
அங்கு ஒரு மரத்துக்கடியில் 7 பேர் இறந்து கிடந்த ஒரு மானின் உடலில் இருந்து, அதன் இறைச்சியை வெட்டிக்கொண்டு இருந்தார்கள். மேலும் மானின் தோலையும், கொம்பையும் தனியே வெட்டி எடுத்து வைத்திருந்தார்கள். உடனே அவர்களை சுற்றிவளைத்து அதிரடிப்படையினர் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் நீதிபுரத்தை சேர்ந்த ரங்கசாமி (வயது43), வெங்கடேசன் (24), பழனிச்சாமி (30), அர்த்தனாரி (50), அழகன் (30), ராமன் (35), கோபி (13) ஆகியோர் என்பதும் அவர்கள் மானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதும் தெரியவந்தது.
கைது–அபராதம்
அதைத்தொடர்ந்து அவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகளும், 4 கத்திகளும், 50 கிலோ வெடி மருந்தும் பறிமுதல் செய்யப்பட்டு பர்கூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட மான் இறைச்சி, கொம்புகள், தோல் ஆகியவை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட 7 பேரில் 6 பேருக்கு தலா 20 ஆயிரம் அபராதமும், சிறுவன் கோபிக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புஞ்சைபுளியம்பட்டி அருகே
» வாடிப்பட்டி அருகே திருமணமான
» ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: 3 பேர் பலி
» பத்திரகாளி அம்மன் கோயில் - அந்தியூர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum