தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்க்க போராட்டம்

Go down

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்க்க போராட்டம்  Empty நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்க்க போராட்டம்

Post  meenu Tue Mar 26, 2013 4:49 pm

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

கடைசி டெஸ்ட்

இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதல் இரண்டு ஆட்டமும் டிராவில் முடிந்தது.இந்த நிலையில் தொடர் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 443 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது.

4–வது நாள் ஆட்டம்

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3–வது நாளில் தேனீர் இடைவேளைக்கு பிறகு 204 ரன்னில் சுருண்டது. பாலோ–ஆனை தவிர்க்க போதிய ரன் எடுக்காவிட்டாலும், இங்கிலாந்து அணிக்கு பாலோ–ஆன் கொடுக்காமல் 2–வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 3–வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்து இருந்தது. புல்டான் 14 ரன்னுடனும், புரோன்லி 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.நேற்று 4–வது நாள் ஆட்டம் நடந்தது. புல்டான், புரோன்லி ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். புரோன்லி 28 ரன்னில் பனேசர் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து பிரன்டன் மெக்கல்லம், புல்டானுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார்கள்.

புல்டான் சதம்

நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் புல்டான் சதம் அடித்தார். அவர் 162 பந்துகளில் 13 பவுண்டரி, 5 சிக்சருடன் தனது 2–வது சதத்தை பூர்த்தி செய்தார். புல்டான் முதல் இன்னிங்சிலும் சதம் அடித்து இருந்தார். இதன் மூலம் 34 வயதான புல்டான் ஒரு டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதம் அடித்த 4–வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். ஏற்கனவே நியூசிலாந்தை சேர்ந்த கிளென் டர்னெர், ஷெப் ஹோவார்த், ஆன்ட்ரூ ஜோன்ஸ் ஆகியோர் இதேபோல் ஒரே டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் கண்டுள்ளனர்.சிறப்பாக ஆடிய புல்டான் 110 ரன் எடுத்த நிலையில் ஸ்டீவன் பின் பந்து வீச்சில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வாட்லிங் 18 ரன்னில் அவுட் ஆனார்.

நியூசிலாந்து 241 ரன்னுக்கு டிக்ளேர்

தேனீர் இடைவேளைக்கு முன்பு நியூசிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 57.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. பிரன்டன் மெக்கல்லம் 53 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 67 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.பின்னர் 481 ரன் எடுத்தால் வெற்றி என்ற சாதனை இலக்குடன் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 52.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்தது. காம்ப்டன் 2 ரன்னிலும், ஜோனதன் டிராட் 37 ரன்னிலும், கேப்டன் குக் 43 ரன்னிலும், ஸ்டீவன் பின் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். இயான்பெல் 8 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

தோல்வியை தவிர்க்க போராட்டம்

இன்று (செவ்வாய்க்கிழமை) 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து அணி வெற்றிக்கு மேலும் 391 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணி கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளது.டெஸ்ட் போட்டி வரலாற்றில் 2003–ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 418 ரன்னை எடுத்து வெற்றி பெற்றதே சாதனையாக உள்ளது. அத்துடன் இந்த மைதானத்தில் 300 ரன்னுக்கு மேல் ஒரு அணி மட்டுமே சேசிங் செய்து இருக்கிறது. எனவே இந்த போட்டியில் தோல்வியை தவிர்க்க டிரா செய்யும் நோக்கில் இங்கிலாந்து அணி போராடும் என்று தெரிகிறது.

தர வரிசையை தக்கவைக்குமா?

டெஸ்ட் தர வரிசையில் 2–வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் தோல்வியை சந்தித்தால் 3–வது இடத்துக்கு தள்ளப்படும். அதேநேரத்தில் டிரா செய்தால் இங்கிலாந்து அணி 2–வது இடத்தை தக்க வைத்து கொள்ள முடியும். இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்தால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் 4–வது இடத்தில் இருந்து 3–வது இடத்துக்கு முன்னேறிய இந்திய அணி, மேலும் ஒரு இடம் முன்னேறி 2–வது இடத்தை பிடிக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்க்க போராட்டம்
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி காரைக்குடியில் வக்கீல்கள் இன்று உண்ணாவிரதம்: மாணவர்கள் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பு
» தோல்வியை தழுவினார் செஸ் சம்பியன் ஆனந்த்!
» டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிக்கு சரிவு!
» ஐ.க்யூ. டெஸ்ட் புக்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum