தோல்வியை தழுவினார் செஸ் சம்பியன் ஆனந்த்!
Page 1 of 1
தோல்வியை தழுவினார் செஸ் சம்பியன் ஆனந்த்!
0
ஸ்பெயினில் நடைபெறும் பில்போ செஸ் தொடரில் 8 சுற்றிலும் டிரா செய்த உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தற்போது 9வது சுற்றில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வியும் அடைந்தார்.
இந்த தொடரில் இவரது முதல் தோல்வி இது என்றாலும் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை ஏற்கனவே நழுவ விட்ட ஆனந்த் குறைந்தது தோல்வியடையாமல் இருப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது.
தரநிலைப்புள்ளிகள் பலதை இழக்கும் ஆனந்த் 6 பேர் கொண்ட இந்தத் தொடரில் 5வது இடத்தில் முடிகிறார்.
மிகவும் மரபான சிசிலியன் பாதுகாப்பு உத்திகளை ஆனந் கடைபிடிக்க கார்ல்சன் கார்ல்சன் சற்றும் எதிர்பாராத பல்வேறு வழிமுறைகளைக் கடைபிடித்து தொடர்ந்து ஆனந்திற்கு நெருக்கடி கொடுத்தார்.
துவக்கத்தில் ஆனந்த் காய்கள் நகர்த்தலில் சாதுரியமாக செயல்பட்டார். ஆனால் நடுவில் கார்சனின் சில நகர்த்தல்களால் ஆனந்தின் காய்களின் இடம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கார்ல்சன் ஒரு பான் காயை தியாகம் செய்தாலும் அது ஆனந்கின் காய்களுக்கு மேலும் நெருக்கடி கொடுப்பதாகவே அமைந்தது.
கடைசியில் ஒரு கட்டத்தில் ஆட்டத்தை காக்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்த ஆனந்த் 30வது நகர்த்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார்.
இரண்டாவது முறையாக கார்ல்சனிடம் தோல்வி தழுவுகிறார் கார்ல்சன்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» செஸ் திறப்புகள்
» செஸ் விளையாட்டு
» நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்க்க போராட்டம்
» நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்க்க போராட்டம்
» மாணவர்கள் தோல்வியை கண்டு துவளக்கூடாது:திரைப்பட இயக்குனர் சசிக்குமார் பேச்சு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum