மியாமி சர்வதேச டென்னிஸ் 3–வது சுற்றில் சோம்தேவ் தோல்வி
Page 1 of 1
மியாமி சர்வதேச டென்னிஸ் 3–வது சுற்றில் சோம்தேவ் தோல்வி
மியாமி சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சோம்தேவ், முதல் நிலை வீரர் ஜோகோவிச்சிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
சோம்தேவ் வெளியேற்றம்
அமெரிக்காவின் மியாமி நகரில் சோனி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டத்தில் உலகின் 254–ம் நிலை வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் (இந்தியா), உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவாக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார்.
68 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சோம்தேவ் 2–6, 4–6 என்ற நேர்செட்டில் ஜோகோவிச்சிடம் தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் டேவிட் பெரர் (ஸ்பெயின்), டிப்சரேவிச் (செர்பியா), ஜிலெச் சிமோன் (பிரான்ஸ்), நிஷிகோரி (ஜப்பான்), டாமி ஹாஸ் (ஸ்பெயின்), மெல்செர் (ஆஸ்திரியா) ஆகியோர் வெற்றி பெற்று 4–வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
ஷரபோவா வெற்றி
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டத்தில் உலகின் 2–ம் நிலை வீரர் மரியா ஷரபோவா (ரஷியா) 6–4, 6–2 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை எலீனா வெஸ்னினாவை தோற்கடித்து 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் சாரா எர்ரானி (இத்தாலி), ஜான்கோவிச் (செர்பியா), அனா இவானோவிச் (செர்பியா), சாகோபாலோவா (செக் குடியரசு), ராபர்ட் வின்சி (இத்தாலி), சோரானா சிர்ஸ்டா (ருமேனியா) ஆகியோர் வெற்றி கண்டு 4–வது சுற்றுக்குள் நுழைந்தனர்.
பூபதி, லியாண்டர் ஜோடி தோல்வி
ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் மகேஷ்பூபதி (இந்தியா)–டேனியல் நெஸ்டர் (கனடா) ஜோடி 3–6, 3–6 என்ற நேர்செட்டில் நிகோலஸ் அல்மாக்ரோ (ஸ்பெயின்)–ஆலிவர் மாராச் (ஆஸ்திரியா) ஜோடியிடம் தோல்வி கண்டு வெளியேறியது.
மற்றொரு ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)–மைக்கேல் லோத்ரா (பிரான்ஸ்) 6–7, 6–7 என்ற செட் கணக்கில் டிமித்ரோவ் (பல்கேரியா)–பிரெடரிக் நீல்சன் (டென்மார்க்) ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இந்தியாவின் சோம்தேவ், சானியா மிர்சா ஆகியோர் மட்டுமே இன்னும் இரட்டையர் பிரிவில் பந்தய சவாலில் நீடிக்கின்றனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மியாமி சர்வதேச டென்னிஸ் 3–வது சுற்றில் சோம்தேவ் தோல்வி
» டென்னிஸ் முழங்கை
» லண்டன் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: இறுதியாட்டத்தில் பூபதி-போபன்னா
» துபாய் டென்னிஸ்: சானியா மிர்சா அரையிறுதிக்கு முன்னேற்றம்!
» ஹாக்கி:இந்தியாவுக்கு 2 ஆவது தோல்வி
» டென்னிஸ் முழங்கை
» லண்டன் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: இறுதியாட்டத்தில் பூபதி-போபன்னா
» துபாய் டென்னிஸ்: சானியா மிர்சா அரையிறுதிக்கு முன்னேற்றம்!
» ஹாக்கி:இந்தியாவுக்கு 2 ஆவது தோல்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum