தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நம்பியார் மனைவி காலமானார்: முதல்வர் இரங்கல்

Go down

நம்பியார் மனைவி காலமானார்: முதல்வர் இரங்கல் Empty நம்பியார் மனைவி காலமானார்: முதல்வர் இரங்கல்

Post  ishwarya Tue Mar 26, 2013 1:05 pm

சென்னை, ஏப். 12: மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.என். நம்பியாரின் மனைவி ருக்மணி (82) சென்னையில் புதன்கிழமை காலமானார்.

சென்னை கோபாலபுரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த ருக்மணி, கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலையில் புதன்கிழமை இரவு காலமானார். அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

மறைந்த நம்பியார் - ருக்மணி தம்பதியருக்கு சுகுமாரன் நம்பியார், மோகன் நம்பியார் என இரண்டு மகன்கள்.

பாஜகவில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த சுகுமாரன் கடந்த ஜனவரியில் காலமானார். மோகன் நம்பியார் தொழிலதிபராக உள்ளார். மகள் சினேகா சென்னையில் வசித்து வருகிறார்.

முதல்வர் இரங்கல்: எம்.என்.நம்பியாரின் மனைவி ருக்மணி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிப்பதோடு அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum