தலைவர் பதவியிலிருந்து எஸ்.ஏ. சந்திரசேகரன் நீக்கம்: சிறப்புப் பொதுக்குழுவில் தீர்மானம்
Page 1 of 1

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோர்.
சென்னை, ஏப்.15: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரனை, அப்பதவியிலிருந்து நீக்கி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு தொடர்பாக ஃபெப்ஸி அமைப்புக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பிரச்னை நீடித்து வந்தது. பல கட்டப் பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் தலைமையில் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இரு தரப்புக்கும் ஓரளவு சமரசம் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர்களின் நலனுக்கு எதிராக எஸ்.ஏ. சந்திரகேசகரன் செயல்பட்டார் என தயாரிப்பாளர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பதவி நீக்கம்: இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
ஃபெப்ஸி அமைப்புக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் தலையிட்டு தீர்வுகாண உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அதன்படி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமைச்சர் செல்லபாண்டியனுக்கும் நன்றி.
சிறப்புப் பொதுக்குழு எடுத்த முடிவின்படி தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்புத் தலைவராக இப்ராஹிம் ராவுத்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஃபெப்ஸி அமைப்பினரின் ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முக்தா சீனிவாசன், ஏ.வி.எம். சரவணன், கேயார், ஆர்.பி.செüத்ரி, டி.சிவா, கே.முரளிதரன் உள்பட 24 உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால கமிட்டி அமைக்கப்படுகிறது.
தயாரிப்பாளர் சங்கத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்ட தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பொருளாளர் தாணு, செயலாளர் தேனப்பன் ஆகியோர் அந்தப் பொறுப்பிலிருந்து 6 மாத காலத்துக்கு நீக்கப்படுகிறார்கள். புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த 4 மாதங்களுக்குள் நடத்தப்படும். தயாரிப்பாளர் சங்கத்தின் செலவுகளை நிர்வகிக்கும் பொறுப்பு இப்ராஹிம் ராவுத்தருக்கும், கே.முரளிதரனுக்கும் வழங்கப்படுகிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீர்மானம் மூலம் நீக்க முடியுமா? தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளை, இதுபோன்று தீர்மானத்தை நிறைவேற்றி நீக்க முடியுமா என சிறப்புப் பொதுக்குழுவில் பங்கேற்ற மூத்த தயாரிப்பாளர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு எதிராக இருக்கிறார்கள். தவிர, சங்கங்கள் என்று வரும்போது பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது.
தயாரிப்பாளர் சங்கத்தில் 6 மேல்நிலை பொறுப்பாளர்கள், 21 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 27 பேர் உள்ளனர். இதில் 20 பேர், எஸ்.ஏ. சந்திரசேகரன் தரப்பினரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் ராஜிநாமா செய்துள்ளனர்.
பொதுக்குழு நடத்த மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 27 பேரில் 9 பேர் இருக்க வேண்டும். எஸ்.ஏ.சந்திரசேகரன் தரப்பில் உள்ள 7 பேரால் தனியாகக் கூட்டம் நடத்த முடியாது. தயாரிப்பாளர் சங்கத்தின் சட்ட திட்டப்படியே இந்த சிறப்புப் பொதுக்குழு கூடி மேற்கண்ட முடிவுகளை எடுத்துள்ளது. தவிர, வாக்களிக்க உரிமையுள்ள 650 தயாரிப்பாளர்களில் 350-க்கும் மேற்பட்டோர் சிறப்புப் பொதுக்குழுவின் தீர்மானங்களுக்கு ஏகமனதாக ஆதரவளித்துள்ளனர் என்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: நீதிபதி பத்மநாபன் அறிவிப்பு
» தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார் எஸ்.ஏ.சந்திரசேகரன்
» இசை இளவல்’ ஜி.வி.பிரகாஷின் வளர்ச்சி – சிறப்புப் பார்வை
» எஸ்.ஏ.சந்திரசேகரன் அணி மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்
» எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum