எஸ்.ஏ.சந்திரசேகரன் அணி மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்
Page 1 of 1

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியை நீக்குவதற்கான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பைக் கண்காணிக்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொறுப்பில் உள்ள எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியை நீக்குவதற்கான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்டுள்ள சில பிரச்னைகளைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி வடபழனி நூறடி சாலையில் உள்ள ராதா பார்க் ஹோட்டலில் சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது. ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் மேற்பார்வையில் நடந்த இந்த சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகிகள் அணி மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மதியம் 1 மணிவரை நடந்த இந்த வாக்கெடுப்பில் 200-க்கும் அதிகமான உறுப்பினர்கள் வாக்களித்தனர். எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியை சேர்ந்த நிர்வாகிகளும், 50-க்கும் அதிகமான உறுப்பினர்களும் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தனர். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் வாக்களித்து வருவதாகவும், சங்கத்தின் அடையாள அட்டை இல்லாதவர்கள் பொய்த் தகவல் அளித்து வாக்களித்து வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதைத் தொடர்ந்து வாக்கெடுப்பில் முறைகேடு நடந்ததாக தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் கலைப்புலி எஸ்.தாணு, நீதிபதி பத்மநாபனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். இரு பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேர்தல் கண்காணிப்பாளர் நீதிபதி பத்மநாபன் கூறுகையில், "" 200-க்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர். அடையாள அட்டைகள் சரி பார்க்கப்பட்ட பின்னரே வாக்களிக்க அனுமதித்துள்ளோம். வாக்கு விவரங்கள் சென்னை மாநகர சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அளிக்கப்படும். அதன் பின் நீதிமன்றமே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி
» தலைவர் பதவியிலிருந்து எஸ்.ஏ. சந்திரசேகரன் நீக்கம்: சிறப்புப் பொதுக்குழுவில் தீர்மானம்
» இரத்த சோகை இல்லா இந்தியா...
» இரத்த சோகை இல்லா இந்தியா!
» முள் இல்லா மூங்கில் சாகுபடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum