தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: நீதிபதி பத்மநாபன் அறிவிப்பு
Page 1 of 1

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், செயலாளர் தேனப்பன், பொருளாளர் தாணு ஆகியோருக்கு எதிராக கேயார் தலைமையிலான தயாரிப்பாளர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்த தீர்மானம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் ஓட்டு பதிவு நடத்தப்பட்டது. இதில் பதிவான ஓட்டுக்களை எண்ணுவதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஓட்டுக்களை எண்ணுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடையை நீக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கேயார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை எல்லாம் விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், ஓட்டு எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து, சென்னை 11-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் வைத்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது பதிவான ஓட்டுக்கள் எண்ணுவதற்கு நீதிபதி குமணன் நடவடிக்கை மேற்கொண்டார்.
அப்போது, எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பில் வக்கீல் மகேஸ்வரி, டி.கே.எஸ்.காந்தி ஆகியோர் ஆஜராகி, சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்போவதால், இன்று ஓட்டுக்களை எண்ணக்கூடாது என்று வாதம் செய்தனர்.
அதற்கு கேயார் தரப்பு வக்கீல் ஆர்.சகாதேவன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதம் செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமணன், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி ஐகோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதி ஈ.பத்மநாபன் தலைமையில் மாலை 4.30 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து நீதிபதி ஈ.பத்மநாபன் தலைமையில் நேற்று மாலை 4.30 மணிக்கு ஓட்டுக்கள் எண்ணப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மொத்தம் 215 ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. இதில் ஒரு ஓட்டு செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 214 ஓட்டுகளில், எஸ்.எஸ்.சந்திரசேகர் தலைமையிலான நிர்வாகிகளுக்கு எதிராக 204 ஓட்டுக்களும், ஆதரவாக 10 ஓட்டுக்களும் பதிவாகி இருந்தது.
இந்த ஓட்டு எண்ணிக்கை முடிவினை நீதிபதி ஈ.பத்மநாபன் நேற்று மாலை அறிவித்தார். இதன்பின்னர் தயாரிப்பாளர் கேயார், நிருபர்களிடம் கூறியதாவது:-
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், செயலாளர் தேனப்பன், பொருளாளர் கலைபுலி தாணு உள்ளிட்ட நிர்வாகிகள் செயல்பாடுகளினால் அவர்கள் மீது சங்க உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், சந்திரசேகர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிப் பெற்றுள்ளது. 10 ஓட்டுக்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவாக பதிவாகியுள்ளது. மீதமுள்ள 204 ஓட்டுக்கள் எதிராக பதிவாகி உள்ளது. எனவே எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திமுக தோல்வி-தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், பெப்ஸி குகநாதன் ராஜினாமா!!
» தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தல்: எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். போட்டி; இன்று வேட்பு மனு தாக்கல்
» இலங்கைக்கு எதிரான தீர்மானம்: திரையுலகினர் உண்ணாவிரதம்
» தலைவர் பதவியிலிருந்து எஸ்.ஏ. சந்திரசேகரன் நீக்கம்: சிறப்புப் பொதுக்குழுவில் தீர்மானம்
» தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum