தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார் எஸ்.ஏ.சந்திரசேகரன்
Page 1 of 1

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து எஸ்.ஏ.
சந்திரசேகரன் 6 மாத காலத்திற்கு நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவரைத் தேர்வு
செய்ய தேர்தல் விரைவில் நடக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பிளவு ஏற்பட்டு அது இரண்டாக
உடைந்துள்ளது. சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரனுக்கு எதிராக
போர்க்கொடி உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சங்க நிர்வாகிகள் மற்றும்
செயற்குழு உறுப்பினர்கள் 20 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். இப்ராகிம்
ராவுத்தர் தலைமையில் இடைக்காலக் கமிட்டியும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக் குழு சென்னை 100 அடி
சாலையில் உள்ள ராதா பார்க் ஓட்டலில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு
மூத்த தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் தலைமை வகித்தார்.
இப்ராகிம் ராவுத்தர், முரளிதரன், கேயார், ஆர்.கே. செல்வமணி, சுந்தர் சி,
ராதாகிருஷ்ணன், பி.சிவா, சக்தி சிதம்பரம், மோகன் நடராஜன், எச். முரளி,
சித்ரா லட்சுமணன், ஹென்ரி, சோபா பொன்னுரங்கம், கலைப்புலி சேகரன், விஜய
முரளி, ஏ.வி.எம். முருகன், சுப்பையா, ஜாக்குவார் தங்கம், ஞானவேல்ராஜா,
சுபாஷ் சந்திரபோஸ், அரிராஜன், வி.ஏ. துரை, ருக்மாங்கதன், வி.சேகர் உள்ளிட்ட
பலர் போட்டி பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
காரசாரமான விவாதம் நடந்தது. ராஜினாமா செய்தவர்கள் தங்கள் ராஜினாமா
கடிதங்களைக் காட்டினர். அப்போது எஸ்.ஏ. சி ஆதரவாளர்களான தயாரிப்பாளர்கள்
தமிழரசன், ரிஷிராஜ், ராஜசிம்மன் உள்ளிட்ட சிலர் எழுந்து தலைவரின்றி கூட்டம்
நடத்துவதா என்று கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்கள் அனைவரும் கூட்டத்தில்
இருந்து வெளியேற்றப்பட்டனர்.
கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இபுராகிம் ராவுத்தர்
தெரிவி்த்தார். அதில சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி சங்கத்தின்
தலைவர் எஸ். ஏ. சந்திரகேரன், செயலாளர் தேனப்பன், பொருளாளர் தாணு ஆகிய 3
பேரையும் சங்கத்தில் இருந்து 6 மாதம் நீக்கி வைப்பது உள்ளிட்ட 6
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
விரைவில் சங்கத்திற்குத் தேர்தல் நடைபெறும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்குப் பிரச்சினை வரலாம் என்று
கருதப்பட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த சினிமாக்காரர்கள் சண்டையால் திரையுலகமே பிளவுபட்டுக் கிடக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தலைவர் பதவியிலிருந்து எஸ்.ஏ. சந்திரசேகரன் நீக்கம்: சிறப்புப் பொதுக்குழுவில் தீர்மானம்
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் போட்டி

» தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தல்: எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். போட்டி; இன்று வேட்பு மனு தாக்கல்
» திரைப்பட தணிக்கைத் துறையில் வெளிப்படைத் தன்மை தேவை: நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பேச்சு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum