முகமூடி படப்பிடிப்பில் சிக்கல்?
Page 1 of 1
முகமூடி படப்பிடிப்பில் சிக்கல்?
நடிகர் ஜீவா, பூஜா ஹெக்டே, நரேன் ஆகியோர் நடித்து வரும் முகமூடி படம் ஒரு ஹாலிவுட் பட தரத்திற்கு தயாராகி வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் அப்படத்தில் தற்போது ஒரு சிறிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
படத்தின் சண்டைக் காட்சிகளை அமைக்கும் திலீப் சுப்பராயனுக்கும், படத்தின் தயாரிப்பாளர் மிஸ்கினுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் திலீப் படத்தில் இருந்து விலகிக் கொள்வதாகக் கூறிவிட்டு படப்பிடிப்பில் இருந்து வெளியேறிவிட்டார்.
படப்பிடிப்பின் போது, திலீப்பின் உதவியாளரை மிஸ்கின் திட்டியதால் வந்த பிரச்னையில் படத்தில் இருந்து திலீப் விலகியுள்ளதாக படக்குழு கூறுகிறது.
திலீப்புடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. இப்படத்திற்கு வெளிநாட்டு ஸ்டன்ட் மாஸ்டரை நியமிக்க தயாரிப்பாளர் கூறியபோது கூட, திலீப்பை பரிந்துரை செய்தது நான்தான் என்கிறார் மிஸ்கின்.
படப்பிடிப்பில் எந்த பிரச்சினையும் இல்லை. முகமூடி படப்பிடிப்பு மிகத் தாமதமாக நடைபெறுவதால், மற்றப் படங்களுக்கு நான் கொடுத்த தேதிகளில் பிரச்சினை ஏற்படுவதால் அதில் இருந்து விலகிவிட்டதாக திலீப் கூறுகிறார்.
தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தயாரிப்பு வட்டம் எவ்வாறு இதனை சமாளிப்பது என்று யோசித்து வருகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முகமூடி உருவான கதை!
» ஆகஸ்டில் முகமூடி
» முகமூடி – மைண்ட் பவர்
» யுகே-யில் முகமூடி
» முகமூடி ஆகஸ்டில் வெளியாகும்
» ஆகஸ்டில் முகமூடி
» முகமூடி – மைண்ட் பவர்
» யுகே-யில் முகமூடி
» முகமூடி ஆகஸ்டில் வெளியாகும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum